யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
தேசிய ஜுனியர் தடகள போட்டி : தமிழகம் சாம்பியன்
ஜாம்ஷெட்பூர்( ஏஜென்சி), புதன்கிழமை, 3 செப்டம்பர் 2008   ( 15:19 IST )
ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற 20-வது தேசிய மண்டலங்களுக்கு இடையேயான ஜுனியர் தடகள போட்டியில் 54 பதக்கங்களை கைப்பற்றி மிழ்நாடு அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

14, 16, 18 மற்றும் 20 வயதுக்குட்பட்ட பிரிவில் ஆண்கள், பெண்களுக்கு நடைபெற்ற போட்டியில் தமிழகம் மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

தமிழ்நாடு அணி 23 தங்கம், 20 வெள்ளி, 11 வெண்கல பதக்கங்களை பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

இதில் ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு 10 தங்கம்,10 வெள்ளி, 5 வெண்கல பதக்கங்கள் பெற்றது.
பெண்கள் பிரிவில் 13 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் பெற்று முதலிடத்தை பிடித்தது.

உத்தரபிரதேசம் இரண்டாவது இடத்தையும், அரியானா மூன்றாவவது இடத்தையும் பிடித்தன.

இந்தப் போட்டியின் அடிப்படையில் புனேயில் நடைபெறும் காமன்வெல்த் இளைஞர் தடகள போட்டிக்கான 98 பேர் கொண்ட இந்திய தேர்வு அணி அறிவிக்கப்பட்டது. பயிற்சியின் முடிவில் இறுதி அணி தேர்வு செய்யப்படும்.

சாம்பியன் பட்டம் பெற்ற தமிழக அணி நாளை மறுதினம் அதிகாலை சென்னை திரும்புகிறது. அன்று தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
யு.எஸ். ஓபன் அரையிறுதியில் பயஸ் இணை; பூபதி தோல்வி
ஐபிஎல் மோகம்: சைமண்ட்ஸுக்கு வாட்சன் அறிவுறுத்தல்
யு.எஸ். ஓபன் டென்னிஸ் : காலிறுதியில் நாடல்
யு.எஸ். ஓபன் : காலிறுதியில் வில்லியம்ஸ் சகோதரிகள் மோதல்
யு.எஸ். ஓபன் டென்னிஸ் : காலிறுதியில் பயஸ் இணை
யு.எஸ். ஓபன் கலப்பு இரட்டையர் : பூபதி இணை தோல்வி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...