யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
யு.எஸ். ஓபன் அரையிறுதியில் பயஸ் இணை; பூபதி தோல்வி
நியூயார்க் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 2 செப்டம்பர் 2008   ( 18:25 IST )
யு.எஸ். ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவின் அரையிறுதிச் சுற்றுக்கு, இந்தியாவின் லியாண்டர் பயஸ் - ஜிம்பாப்வேயின் கேரா பிளாக் இணை முன்னேறியது.

அதேநேரத்தில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மகேஷ் பூபதி - பகாமஸின் மார்க் நெளல்ஸ் இணை தோல்வியுற்று வெளியேறியது.

இப்போட்டிகளின் தரவரிசையில் 5-ம் இடத்திலுள்ள பயஸ் - பிளாக் இணை, 7-5, 6-2 என்ற நேர் செட்களில் செக். குடியரசின் மார்டின் டாம் - விளாடிமிரா உலிரோவா இணையை வீழ்த்தி, அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

செக். குடியரசின் லூகாஸ் டிளவுஹியுடன் இணைந்து ஆடவர் இரட்டையர் போட்டிகளில் விளையாடி வரும் பயஸ், ஏற்கெனவே காலிறுதிக்குத் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில், கலப்பு இரட்டையரில் ஏற்கெனவே தோல்வியுற்று வெளியேறிவிட்ட மகேஷ் பூபதி, ஆடவர் இரட்டையர் பிரிவிலும் தோல்வியைத் தழுவினார்.

பூபதி - நெளல்ஸ் இணை தமது மூன்றாம் சுற்றில், அர்ஜென்டினாவின் மெக்ஸிமோ கோன்சலஸ் - ஜுவான் மோனாகோ இணையிடம் 6-2, 4-6, 4-6 என்ற செட்களில் தோல்வியைத் தழுவியது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஐபிஎல் மோகம்: சைமண்ட்ஸுக்கு வாட்சன் அறிவுறுத்தல்
யு.எஸ். ஓபன் டென்னிஸ் : காலிறுதியில் நாடல்
யு.எஸ். ஓபன் : காலிறுதியில் வில்லியம்ஸ் சகோதரிகள் மோதல்
யு.எஸ். ஓபன் டென்னிஸ் : காலிறுதியில் பயஸ் இணை
யு.எஸ். ஓபன் கலப்பு இரட்டையர் : பூபதி இணை தோல்வி
சென்னை மாரத்தா‌ன் ஓட்டத்தில் 50,000 பேர் ப‌ங்கே‌ற்பு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...