யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
யு.எஸ். ஓபன் : காலிறுதியில் வில்லியம்ஸ் சகோதரிகள் மோதல்
நியூயார்க் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 2 செப்டம்பர் 2008   ( 11:07 IST )
யு.எஸ். ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிச் சுற்றில், அமெரிக்காவின் வில்லியம்ஸ் சகோதரிகள் மோதவுள்ளனர்.

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் வில்லியம்ஸ் சகோதரிகள் இருவரும் நேருக்கு நேர் மோதுவது, இது ஆறாவது தடவையாகும்.

இம்முறை, காலிறுதிப் போட்டியிலேயே தங்களில் ஒருவர் வெளியேறுவது உறுதி என்பதால், இரு சகோதரிகளுக்கும் சற்று ஏமாற்றமே.

இப்போட்டிகளின் தரநிலையில் 7-ம் இடத்திலுள்ள வீனஸ் தனது 4-வது சுற்றில், 6-1, 6-3 என்ற நேர் செட்களில், போலந்தின் அக்னியெச்கா ராத்வன்ஸ்காவை (தரநிலை-9) எளிதில் தோற்கடித்தார்.

அதேபோல், தரநிலையில் 4-ம் இடத்திலுள்ள செரீனா தனது 4-ம் சுற்றில், 6-2, 6-2 என்ற நேர் செட்களில், வைல்ட் கார்டு தகுதி பெற்ற பிரான்சின் செவரின் பிரிமோண்டை மிக எளிதில் வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினார்.

இந்த வெற்றிக்குப் பிறகு செரீனா பேசுகையில், "நாங்கள் இருவரும் அரையிறுதியில் மோதியிருந்தால் கூட திருப்தியாக இருந்திருக்கும். எனினும், இருவரில் ஒருவர் அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதி," என்றார்.

மேலும், "அரையிறுதியில் காத்திருக்கும் கடினமான போட்டியை எதிர்கொள்வதற்கு, என்னை தயார் செய்து வருகிறேன்," என்றார் செரீனா.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
யு.எஸ். ஓபன் டென்னிஸ் : காலிறுதியில் பயஸ் இணை
யு.எஸ். ஓபன் கலப்பு இரட்டையர் : பூபதி இணை தோல்வி
சென்னை மாரத்தா‌ன் ஓட்டத்தில் 50,000 பேர் ப‌ங்கே‌ற்பு
யு.எஸ். ஓபன் டென்னிஸ் : 4-ம் சுற்றில் நாடல்
ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசை: இந்தியாவுக்கு 5வது இடம்!
இலங்கை ஆறுதல் வெற்றி: இந்தியாவுக்கு கோப்பை!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...