|
| ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசை: இந்தியாவுக்கு 5வது இடம்! |
| மும்பை (ஏஜென்சி), 30 ஆகஸ்டு 2008 ( 13:50 IST ) | |
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றினாலும், நேற்று நடந்த 5வது ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்ததால், இந்திய அணி ஐ.சி.சி. ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் 4வது இடத்தில் இருந்து, 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
ஐ.சி.சி.யின் ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இதில், ஆஸ்திரேலிய அணி 130 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தென்ஆப்ரிக்கா 120 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், நியூசிலாந்து 116 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளன.
தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியதன் மூலம் இங்கிலாந்து அணி 114 புள்ளிகளுடன் 4வது இடத்திலும், இந்தியா 113 புள்ளிகளுடன் 5வது இடத்திலும் உள்ளன.
பாகிஸ்தான் 110 புள்ளிகளுடன் 6வது இடத்திலும், இலங்கை 105 புள்ளிகளுடன் 7வது இடத்திலும் உள்ளன.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்தாலும், அடுத்த 3 போட்டிகளை கைப்பற்றியதன் மூலம் 3-1 என்ற போட்டிக் கணக்கில் இந்திய அணி, தொடரைக் கைப்பற்றியது.
எனினும், நேற்று நடந்த 5வது ஒருநாள் போட்டியில் 112 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது.
இதன் மூலம் இந்திய அணி தரவரிசைப் பட்டியலில் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|