|
| இலங்கை ஆறுதல் வெற்றி: இந்தியாவுக்கு கோப்பை! |
| கொழும்பு (ஏஜென்சி), சனிக்கிழமை, 30 ஆகஸ்டு 2008 ( 09:09 IST ) | |
கொழும்புவில் நடந்த 5வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. எனினும் 3-2 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடியது.
டெஸ்ட் தொடரில் 2-1 என கணக்கில் இலங்கை அணி கோப்பையை கைப்பற்றியது. ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றிப் பெற்றது. அடுத்த 3 போட்டிகளிலும் இந்திய அணி தொடர் வெற்றிப் பெற்று 3-1 என்ற கணக்கில் கோப்பையை உறுதி செய்தது.
5வது ஒருநாள் போட்டி கொழும்புவில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது.
ஜெயசூர்யா 1, வார்னபுரா 30, உடாவாட் 43ம் சங்கக்காரா 1, ஜெயவர்த்தனே 12, கபுகேதரா 26, முபாரக் 47, துஷாரா 54 ரன்கள் எடுத்தனர். அந்த அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து இந்திய அணி களமிறங்கியது. கோக்லி 31, கம்பீர் 11, யுவராஜ் சிங் 17, ரெய்னா 10, ரோகித் சர்மா 3, தோனி 1, பதான் 7, ஜாகீர்கான் 3, ஆர்.பி.சிங் 4, ஓஜா 5, முனாப் பட்டேல் 4 ரன்கள் எடுத்தனர்.
ஆட்டத்தின் இடையே, இந்தியா 14.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்திருந்தபோது, திடீரென மழை பெய்ததால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
மழை நின்றதும், டக்வொர்த்- லீவிஸ் விதிமுறைப்படி 44 ஓவரில் 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற புதிய இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.
எனினும், மழை காரணமாக ஆடுகளம் பேட்டிங்குக்கு எதிராக மாறியதால் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்திய அணி 26.3 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், டக்வொர்த்-லீவிஸ் விதிமுறைப்படி இலங்கை அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றிப் பெற்றது.
இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த போதிலும், ஏற்கனவே 3 போட்டிகளில் பெற்ற வெற்றியின் காரணமாக 3-2 என்ற கணக்கில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.
இலங்கை அணியின் குலசேகரா ஆட்டநாயகன் விருதுப் பெற்றார். 5 ஆட்டங்களிலும் 193 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த கேப்டன் தோனி தொடர் நாயகன் விருதைப் பெற்றார். அவருக்கு கார் பரிசளிக்கப்பட்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|