|
| 5வது ஒருநாள் போட்டி: இலங்கை 82/4
|
| கொழும்பு (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 29 ஆகஸ்டு 2008 ( 16:26 IST ) | |
இந்தியாவிற்கு எதிரான 5வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்து திணறிகொண்டிருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதல் போட்டியில் இலங்கை அணி வென்றது.
அடுத்தடுத்து நடந்த 3 போட்டிகளிலும் இந்திய அணி தொடர்ந்து வெற்றிப்பெற்று 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் 5வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி கொழும்பு பிரேமதேசா மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜெயசூர்யா 1 ரன்னில் அவுட் ஆனார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த வார்னபுரா மற்றும் உடாவாட்டே இருவரும் சிறப்பாக ஆட ஆரம்பித்தனர். எனினும், வார்னபுரா 30 ரன்களிலும், உடாவாட்டே 43 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
தற்போது சங்ககாரா 1 ரன் எடுத்துள்ளார். அவருடன் ஜெயவர்த்தனே ஜோடி சேர்ந்துள்ளார். 18.4 ஓவர்களில் இலங்கை அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா தரப்பில் பதான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜாகீர்கான் மற்றும் ஆர்.பி.சிங் இருவரும் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|