யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
மெண்டிஸ் 'சுழல்' உத்தியை சமாளித்ததில் மகிழ்ச்சியே : ராய்னா
கொழும்பு (ஏஜென்சி), வியாழக்கிழமை, 28 ஆகஸ்டு 2008   ( 17:30 IST )
இலங்கை சுழற் பந்துவீச்சாளர் மெண்டிஸின் உத்தியை சமாளிக்க முடிந்தது, தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று இந்திமிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சுரேஷ் ராய்னா கூறியுள்ளார்.

கொழும்புவில் நேற்று நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் 76 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டு, ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார், சுரேஷ் ராய்னா.

இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

இலங்கை சுழற் பந்துவீச்சாளர்களை சமாளித்த விதம் பற்றி, செய்தியாளர்களிடம் சுரேஷ் ராய்னா கூறியதாவது:

மெண்டிஸ் உள்பட இலங்கை சுழற் பந்துவீச்சாளர்களின் கைகளை உன்னிப்பாக கவனித்தேன். அவர்களது கைகளை படிக்கத் தெரிந்துவிட்டாலே, பந்துவீச்சினை எளிதில் சமாளித்துவிடலாம் என்று எண்ணினேன். அதுவே எனது திட்டமாகவும் இருந்தது.

முரளி மற்றும் மெண்டிஸின் பந்துவீச்சை நன்றாக கவனித்து, அதை சிறப்பாக எதிர்கொள்ள முடியும் என்பதை உணர்கிறேன். இந்திய அணி வெற்றி பெறுவதற்கு, என்னுடைய ரன்களும் வெகுவாக உதவியதில் பெருமகிழ்ச்சி.

எனது சிறப்பான ஆட்டத்துக்கு தோனியின் தலைமை மிகுந்த உதவியாக இருக்கிறது.களத்திலும் பயிற்சியின்போதும் திட்டமிட்டு விளையாடுவதற்கு அவர் சிறந்த வழிகாட்டுதலை வழங்கிறார் என்றார், சுரேஷ் ராய்னா.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
யு.எஸ். ஓபன் டென்னிஸ் : பயஸ் இணை முன்னேற்றம்
யு.எஸ். ஓபன் : 3-ம் சுற்றில் ஜெலீனா, ஸ்வெட்லானா
இலங்கை: தொடரை வென்றது இந்தியா!
4-ம் ஒருநாள் : இலங்கைக்கு 259 ரன்கள் இலக்கு
4-ம் ஒருநாள் : ராய்னா நிதானம்; இந்திய அணி 154/3
4-ம் ஒருநாள் போட்டி : இந்திய அணி 97/3
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...