|
| யு.எஸ். ஓபன் டென்னிஸ் : பயஸ் இணை முன்னேற்றம் |
| நியூயார்க் (ஏஜென்சி), 28 ஆகஸ்டு 2008 ( 12:49 IST ) | |
யு.எஸ். ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவின் இரண்டாம் சுற்றுக்கு, இந்தியாவின் லியாண்டர் பயஸ் - செக். குடியரசின் லூகாஸ் டிளவுஹி இணை முன்னேறியது.
இப்போட்டிகளின் தரநிலையில் ஏழாம் இடத்திலுள்ள இந்த இணை தங்களது முதல் சுற்றில், ஸ்பெயினின் ஆஸ்கர் ஹெர்னாண்டஸ் - ஆல்பர்ட் மோன்டென்ஸ் இணையை எதிர்கொண்டது.
இதில், இந்திய - செக். குடியரசு இணை 6-7, 6-1, 6-4 என்ற செட் கணக்கில், ஸ்பெயின் இணையை போராடி வென்றது.
முதல் செட்டில் சற்று பின்னடைவைச் சந்தித்தாலும், அடுத்தடுத்த செட்களில் பயஸ் - டிளவுஹி இணை சிறப்பாக விளையாடி வெற்றிக்கு வித்திட்டது.
இதைத் தொடர்ந்து, இந்த இணை தங்களது இரண்டாம் சுற்றில், அர்ஜென்டினாவின் எட்வர்ட் ஷ்வாங் - இத்தாலியின் போட்டிடோ இணையை எதிர்கொள்கிறது.
இந்தியாவின் மகேஷ் பூபதி - பகாமஸின் மார்க் நெளஸ்ல் இணையும், இந்தியாவின் போபண்ணா - பாகிஸ்தானின் குரேஷி இணையும் தங்களது முதல் சுற்று ஆட்டங்களில் இன்று விளையாடவுள்ளன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|