|
| இலங்கை: தொடரை வென்றது இந்தியா! |
| கொழும்பு (ஏஜென்சி), வியாழக்கிழமை, 28 ஆகஸ்டு 2008 ( 09:05 IST ) | |
இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் வென்றதன் மூலம் இந்திய அணி ஒரு நாள் தொடரை வென்றுள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் போட்டியில் இலங்கையும், 2வது மற்றும் 3வது போட்டிகளில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
4வது ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் நடைபெறுவதாக இருந்தது. மழை காரணமாக ஒருநாள் ஒத்திவைக்கப்பட்டு நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது.
துவக்க வீரர்களாக காம்பிர், கோஹ்லி களமிறங்கினர். காம்பிர் 17 ரன்களில் வெளியேறினார். அடுத்துவந்த யுவராஜ் சிங் ரன் எதுவும் எடுக்காமலேயே ஆட்டமிழந்தார்.
கோஹ்லி 54, ரெய்னா 76, தோனி 71, ரன்கள் எடுத்தனர். அதன் பின்னர் இந்திய வீரர்கள் ரோகித் சர்மா (18), பத்ரிநாத் (6), ஹர்பஜன் 2, குமார் 2 என சொற்ப ரன்களிலேயே அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
49.4 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 258 ரன்கள் எடுத்தது.
இலங்கை தரப்பில் துஷாரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வாஸ், குலசேகரா, மென்டிஸ், முரளிதரன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
இதையடுத்து, 259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.
ஜெயசூர்யா 60, சங்ககரா 6, ஜெயவர்தனா 16, கபுகேதரா 30, தில்ஷன் 12, வாஸ் 17, குலசேகரா 12, துஷாரா 40 ரன்கள் எடுத்தனர்.
46.3 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் இந்திய அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, 3-1 என கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
சொந்த மண்ணில் இலங்கையை வீழ்த்தியதன் மூலம், சமீபத்தில் நடந்த டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்விக்கும் சரியான பதிலடி கொடுத்துள்ளது இந்தியா. ஆட்டநாயகன் விருதை ரெய்னா தட்டிச் சென்றார்.
இரு அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 5வது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|