|
| 4-ம் ஒருநாள் : இலங்கைக்கு 259 ரன்கள் இலக்கு |
| கொழும்பு (ஏஜென்சி), புதன்கிழமை, 27 ஆகஸ்டு 2008 ( 18:32 IST ) | |
கொழும்பில் நடைபெற்றுவரும் 4-வது ஒருநாள் போட்டியில், இலங்கை அணிக்கு 259 ரன்கள் என்ற சற்றே கடுமையான இலக்கினை இந்தியா நிர்ணயித்துள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணி, 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 258 ரன்கள் எடுத்தது.
சுரேஷ் ராய்னா 76 ரன்களையும், கேப்டன் தோனி 71 ரன்களையும் குவித்து, அணியின் ரன் எண்ணிக்கையை வெகுவாக உயர்த்தினர்.
துவக்க ஆட்டக்காரர் கோஹ்லி 54 சேர்த்து, நிதானமான தொடக்கத்தை அளித்தார். ரோகித் ஷர்மா 18 ரன்களையும், கம்பீர் 17 ரன்களையும் எடுத்தனர். ஏனையோர் சொற்ப ரன்களே எடுத்தனர்.
இலங்கை தரப்பில் துஷாரா 5 விக்கெட்டுகளையும், வாஸ், குலசேகரா, மெண்டிஸ் மற்றும் முரளிதரன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றிவிடும்.
தற்போது, மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|