|
| 4-ம் ஒருநாள் : ராய்னா நிதானம்; இந்திய அணி 154/3
|
| கொழும்பு (ஏஜென்சி), புதன்கிழமை, 27 ஆகஸ்டு 2008 ( 17:05 IST ) | |
இலங்கை அணிக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 31 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து பேட் செய்து வருகிறது.
சுரேஷ் ராய்னா 53 பந்துகளில் 46 ரன்களும், கேப்டன் தோனி 40 பந்துகளில் 31 ரன்களும் ௦௦எடுத்த நிலையில் களத்தில் உள்ளனர்.
முன்னதாக, துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான கம்பீர் 17 ரன்களிலும், யுவராஜ் சிங் ரன் ஏதும் எடுக்காத நிலையிலும் ஆட்டமிழந்தனர்.
அதையடுத்து, நிதானமாக பேட் செய்து அரைசதம் அடித்த கோஹ்லி, 54 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இலங்கை தரப்பில் வாஸ், குலசேகரா மற்றும் துஷாரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
மழையின் காரணமாக ஒருநாள் ஒத்திவைக்கப்பட்ட இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட் செய்ய முடிவெடுத்து முதலில் களமிறங்கியது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|