யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
யு.எஸ். ஓபன் டென்னிஸ் : 2-ம் சுற்றில் ஃபெடரர், ஃபிஷ்
நியூயார்க் (ஏஜென்சி), 27 ஆகஸ்டு 2008   ( 12:13 IST )
யு.எஸ். ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இரண்டாம் சுற்றுக்கு, ரோஜர் ஃபெடரர், மார்டி ஃபிஷ் உள்ளிட்டோர் முன்னேறியுள்ளனர்.

தரநிலையில் 2-ம் இடத்திலுள்ள சுவிட்ஸர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் தனது முதல் சுற்றில், அர்ஜென்டீனா வீரர் மேக்சிமோ கொன்சாலேஸை 6-3, 6-0, 6-3 என்ற செட்களில் வீழ்த்தி முன்னேறினார்.

அமெரிக்க வீரர் மார்டி ஃபிஷ், 7-6, 6-7, 6-3, 6-4 என்ற செட்களில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மீட்சை வீழ்த்தி 2-ம் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

அதேநேரத்தில், தரநிலையில் இடம்பெறாத ரஷ்ய வீரர் மாரட் சஃபீன், 3-6, 6-2, 6-3, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரர் வின்ஸென்ட் ஸ்பாடியாவை போராடி வீழ்த்தினார்.

ஜெர்மனியின் டாமி ஹாஸ், அமெரிக்க புதுமுக வீரர் சாம் குவெர்ரி, குரேஷியாவின் இவோ கார்லோவிக், ரஷ்யாவின் ஐகோர் ஆந்த்ரீவ், ஸ்பெயினின் லோபஸ், ஃபின்லாந்தின் நைமினென், பிரான்ஸ் வீரர் ஹென்றி மேத்யூ, சிலியின் ஃபெர்னாண்டோ கொன்சாலேஸ், இத்தாலியின் ஆந்திரியாஸ் செப்பி, ஸ்பெயின் வீரர் வெர்டாஸ்கோ ஆகியோரும் தங்களது முதல் சுற்று ஆட்டங்களில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜனாதிபதியுடன் சுஷில், விஜேந்தர் சந்திப்பு
4-வது ஒருநாள் : மழையால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்
அகில் : நழுவியது பதக்கம்; கிட்டியது ரசிகர்களின் பாசம்
இந்தியா-இலங்கை : இன்று 4 வது ஒருநாள் போட்டி
இந்திய ஒலிம்பிக் நாயகர்களுக்கு கோலாகல வரவேற்பு
ஜனாதிபதியுடன் சுஷில், விஜேந்தர் நாளை சந்திப்பு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...