|
| இந்திய ஒலிம்பிக்கை ஒளிரவைத்த மும்மூர்த்திகள்! |
| பீஜிங் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 21 ஆகஸ்டு 2008 ( 13:40 IST ) | |
இந்தியாவில் ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு முக்கியத்துவமும், ஊக்கமும் கிடைக்க வழிவகை செய்த பெருமையை, அபினவ் பிந்த்ரே, சுஷில் குமார் மற்றும் விஜேந்தர் குமார் ஆகியோர் பெற்றுள்ளனர் என்றால், அது எவ்விதத்திலும் மிகையாகாது.
வரலாற்றிலேயே முதல் முறையாக, ஒலிம்பிக் போட்டிகளில் மூன்றுப் பதக்கங்களை வென்றுள்ளது, இந்தியா.
இந்த வியக்கத்தக்க பெருமைக்கு வித்திட்டவர், பீஜிங்கில் தங்கம் வென்ற துப்பாக்கிச் சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா என்றால், இந்தியாவில் ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு உரிய வகையில் ஊக்கம் இன்று கிட்டியுள்ளதற்கு உறுதுணை புரிந்துள்ளவர்களே, சுஷில் குமார் மற்றும் விஜேந்தர் குமார்.
கடந்த 1952-ம் ஆண்டு ஹெல்சின்ஹி ஒலிம்பிக்கில் இரு பதக்கங்களுடன் (ஹாக்கியில் தங்கம், மல்யுத்த வீரர் கே.டி.ஜாதவ் வாயிலாக வெண்கலம்) இந்திய அணி தாயகம் திரும்பியது.
அதையடுத்து, 56 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவுக்கு மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கத்தை நேற்று வென்று தந்துள்ளார், சுஷில் குமார்.
அந்தச் சாதனை சமன் செய்யப்பட்ட மறுகணமே, இன்னொரு இனிப்பையும் இந்தியாவுக்கு வழங்கினார், குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் குமார்.
குத்துச்சண்டைப் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறி, வெண்கலப் பதக்கம் உறுதி என்ற நிலைக்கு கொண்டுவந்துள்ள அவர், அப்போட்டியில் வென்று தங்கம் அல்லது வெள்ளியைக் கொண்டுவரும் முனைப்பில் உள்ளார்.
இவ்விரு வீரர்களும் இன்று இந்திய விளையாட்டில் ஒரு புரட்சிக்கே வித்திட்டுள்ளனர் என்றே சொல்ல வேண்டும்.
அதேபோல், குத்துச்சண்டையில் காலிறுதியில் தோல்வியைத் தழுவினாலும், அகில் குமார் மற்றும் ஜிதேந்தர் குமார் ஆகியோரின் முயற்சிகள் அளப்பறியது. பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் போராட்ட குணமும் இங்கே நினைவுகூறத்தக்கது.
அவ்வப்போது சாதனைகளை நிகழ்த்திவரும் கிரிக்கெட்டுக்கு மட்டும் அதீத முக்கியத்துவம் கொடுத்துவரும் நாட்டில், ஏனைய விளையாட்டுக்களிலும் இந்தியர்களால் சோபிக்க முடியும் என இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்திய சிறார்களை எளிதில் 'கிரிக்கெட்' வசப்படுத்தி வரும் சூழலில், மற்ற விளையாட்டுகளில் கவனம் செலுத்தவும், ஆர்வம் கொள்ளவும் தூண்டுகோலாக, அபினவ் பிந்த்ரா, சுஷில் குமார் மற்றும் விஜேந்தர் குமார் ஆகியோர் மாறியுள்ளனர்.
ஊடகங்களும், அரசியல் தலைவர்களும், ரசிகர்களும் தடகளம் பக்கம் தலைசாய்க்கத் தொடங்கியுள்ளதால், எதிர்காலத்தில் அனைத்து விளையாட்டுகளிலும் இந்திய இளைஞர்கள் மிளிருவர் என்பது உறுதியே.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|