|
| மூன்றாம் நாள் : தில்ஷான் அபாரம்; இலங்கை அணி 518/5 |
| கொழும்பு (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2008 ( 12:00 IST ) | |
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் மூன்றாவது நாள் ஆட்டத்தில், இலங்கை தனது முதல் இன்னிங்ஸ்சில் 147 ஓவர்களில் 5௦ விக்கெட் இழப்புக்கு 518 ரன்கள் எடுத்த நிலையில் பேட் செய்து வருகிறது.
தற்போது அந்த அணியின் தில்ஷான் 120 பந்துகளில் 76 ரன்களும், பிரசன்னா ஜெயவர்த்தனே 60 பந்துகளில் 23 ரன்களும் எடுத்துள்ள நிலையில் களத்தில் உள்ளனர்.
முன்னதாக, சமராவீரா 127 ரன்கள் குவித்திருந்த நிலையில், ஜாகீர் கான் வீசிய பந்தில் லஷ்மணிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
நேற்றைய ஆட்ட நேர முடிவில், இலங்கை 120 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 422 ரன்கள் எடுத்திருந்தது.
வார்னபுரா, ஜெயவர்த்தனே மற்றும் சமரவீரா ஆகிய மூவரின் சதமும், அந்த அணியின் ரன் எண்ணிக்கையை வெகுவாக உயர்த்தியது.
வார்னபுரா 115 ரன்களும், கேப்டன் ஜெயவர்த்தனே 136 ரன்களும் குவித்தனர். வாண்டோர்ட் 3 ரன்களையும், சங்ககாரா 12 ரன்களையும் மட்டுமே எடுத்தனர்.
இந்தியா தரப்பில், இஷாந்த் ஷர்மா மற்றும் ஜாகீர் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங் ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|