யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
முதல் டெஸ்ட் : மூவர் சதத்தால் வலு பெற்றது இலங்கை அணி
கொழும்பு (ஏஜென்சி), வியாழக்கிழமை, 24 ஜூலை 2008   ( 18:17 IST )
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாவது நாள் ஆட்ட நேரமுடிவில், இலங்கை தனது முதல் இன்னிங்ஸ்சில் 120 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 422 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது.

வார்னபுரா, ஜெயவர்த்தனே மற்றும் சமரவீரா ஆகிய மூவரின் சதமும், அந்த அணியின் ரன் எண்ணிக்கையை வெகுவாக உயர்த்தியது.

ஆட்டநேர முடிவில், சமரவீரா 187 பந்துகளில் 111 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் இருந்தார். மறுமுனையில் தில்ஷன் 55 பந்துகளில் 20 ரன்கள் எடுத்திருந்தார்.

முன்னதாக, துவக்க ஆட்டக்காரர் வாண்டோர்ட் 3 ரன்களிலும், சங்ககாரா 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அதைத் தொடர்ந்து, வார்னபுரா 115 ரன்களும், ஜெயவர்த்தனே 136 ரன்களும் குவித்த குவித்திருந்த நிலையில் ஆட்டமிழந்தனர்.

இந்தியா தரப்பில், இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங் மற்றும் ஜாகீர் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

இந்த டெஸ்ட்டில் முதன் முறையாக நடுவர் தீர்ப்பு முறையீடு முறை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இதுவரை இந்தியா இரண்டு முறையும், இலங்கை அணி ஒரு தடவையும் முறையீடு செய்தது.

இவற்றில், இந்தியாவுக்கு இரண்டுமுறையும் பாதகமான தீர்ப்பே கிடைத்தது; இலங்கைக்கு ஒருமுறை சாதகமான தீர்ப்பு கிடைத்தது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
முதல் டெஸ்ட் : ஜெயவர்த்தனே அபார ௦சதம்; இலங்கை அணி 304/3
லாஸ் ஏஞ்சல்ஸ் டென்னிஸ் : 2-ம் சுற்றில் சானியா தோல்வி
முதல் டெஸ்ட் : வார்னபுரா அபார ௦சதம்; இலங்கை அணி 189/2
ரோஜர்ஸ் மாஸ்டர்ஸ் : காலிறுதியில் பூபதி இணை
முதல் நாளில் விளையாடியது மழை; இலங்கை அணி 85/2
முதல் டெஸ்ட்: இஷாந்த், ஜாகீர் அபாரம்; இலங்கை அணி 73/2
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...