|
| முதல் டெஸ்ட் : வார்னபுரா அபார ௦சதம்; இலங்கை அணி 189/2 |
| கொழும்பு (ஏஜென்சி), வியாழக்கிழமை, 24 ஜூலை 2008 ( 12:04 IST ) | |
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாவது நாளான இன்று, இலங்கை தனது முதல் இன்னிங்ஸ்சில் 52 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்த நிலையில் விளையாடி வருகிறது.
அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களுள் ஒருவரான வார்னபுரா, சிறப்பாக பேட் செய்து சதமடித்தார். டெஸ்ட் போட்டிளில், இது அவருக்கு இரண்டாவது சதமாகும்.
தற்போது அவர், 167 பந்துகளில் 103 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் உள்ளார். மறுமுனையில் கேப்டன் ஜெயவர்த்தனே 121 பந்துகளில் 59 ரன்கள் எடுத்துள்ள நிலையில் நிதானமாக விளையாடி வருகிறார்.
நேற்றைய முதல் நாள் ஆட்டம், மழை காரணமாக 22 ஓவர்களிலேயே முடித்துக் கொள்ளப்பட்டது. அப்போது, இலங்கை அணி 22 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்திருந்தது.
முன்னதாக, துவக்க ஆட்டக்காரர் வாண்டோர்ட் 3 ரன்களிலும், சங்ககாரா 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இந்தியா தரப்பில், இஷாந்த் ஷர்மா மற்றும் ஜாகீர் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|