|
| ரோஜர்ஸ் மாஸ்டர்ஸ் : காலிறுதியில் பூபதி இணை |
| டொரான்டோ (ஏஜென்சி), வியாழக்கிழமை, 24 ஜூலை 2008 ( 11:56 IST ) | |
டொரான்டோவில் நடைபெற்று வரும் ரோஜர்ஸ் மாஸ்டர்ஸ் ஆடவர் இரட்டையர் டென்னிஸ் காலிறுதிக்கு, இந்தியாவின் மகேஷ் பூபதி - பகாமஸின் மார்க் நெளல்ஸ் இணை தகுதி பெற்றுள்ளது.
இந்தத் தொடரில் இதுவரை ஒரு சுற்றில் கூட விளையாடாமலேயே, இந்த இணை காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இப்போட்டிகளின் 4-ம் இடத்திலுள்ள இந்திய - பகாமஸ் இணைக்கு, முதல் சுற்று விலக்கு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, இரண்டாவது சுற்றில் அமெரிக்காவின் மார்டி ஃபிஷ் - ஆண்டி ரோடிக் இணையுடன் மோதவிருந்தது.
ஆனால், மார்டி ஃபிஷ்ஷுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக, அந்த இணை போட்டியில் இருந்து விலகிக் கொண்டது. இதனால், காலிறுதிக்கு பூபதி - நெளல்ஸ் இணை நேரடியாக தகுதி பெற்றுவிட்டது.
மற்றொரு இரண்டாவது சுற்றில், சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் - ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா இணையுடன் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - செக். குடியரசின் லூகாஸ் ட்ளவுஹி இணை மோதுகிறது.
இதில் லியாண்டர் - லூகாஸ் இணை வெற்றி பெற்றால், காலிறுதியில் பூபதி - நெளல்ஸ் இணையை சந்திக்கும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|