|
| ஈஸ்ட் வெஸ்ட் பேங்க் கிளாசிக் : காலிறுதியில்௦ சானியா இணை |
| லாஸ் ஏஞ்சல்ஸ் (ஏஜென்சி), 23 ஜூலை 2008 ( 12:50 IST ) | |
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வரும் ஈஸ்ட் வெஸ்ட் பேங்க் கிளாசிக் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் காலிறுதிச் சுற்றுக்கு, இந்தியாவின் சானியா மிர்சா - அமெரிக்காவின் பெதானி மெட்டெக் இணை தகுதி பெற்றுள்ளது.
இப்போட்டிகளின் தரநிலையில் 2-ம் இடத்திலுள்ள இந்த இணை தமது முதல் சுற்றில், அமெரிக்காவின் வானியா கிங் - ரஷ்யாவின் அல்லா குட்ரியாவ்ட்சேவா இணையை எதிர்கொண்டது.
இதில், சானியா - பெதானி இணை 6-3 6-4 என்ற நேர் செட்களில், அமெரிக்க - ரஷ்ய இணையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
இதையடுத்து இந்த இணை, ரஷ்யாவின் எலினா வெர்சினா - வேரா ஸ்வோனரேவா இணையை எதிர்கொள்கிறது.
ரஷ்ய இணை தமது முதல் சுற்றில், அமெரிக்காவின் டிராசி லின் - ரிஸா ஸலமேடா இணையை 6-4, 6-4 என்ற நேர் செட்களில் தோற்கடித்தது.
இதனிடையே, மகளிர் ஒற்றையர் பிரிவின் இரண்டாம் சுற்றில், சீனாவின் மெங் யுவானை சானியா சந்திக்கிறார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|