யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
மழையால் இந்தியா-இலங்கை முதல் டெஸ்ட் தாமதம்
கொழும்பு (ஏஜென்சி), புதன்கிழமை, 23 ஜூலை 2008   ( 12:09 IST )
இந்தியா - இலங்கை அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி, கொழும்பில் பெய்த மழை காரணமாதாமதமடைந்துள்ளது.

கொழும்பு நகரில் நேற்றிரவு கடும் மழை பெய்ததையடுத்து, சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளம் மைதானத்தில் ஈரப்பதம் மாறாமல் நீடித்துள்ளது. இதனால், ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

முதல் டெஸ்டும் மூன்று எதிர்பார்ப்புகளும்!

சச்சினின் சாதனை, மெண்டிஸின் பந்துவீச்சு மற்றும் நடுவர் தீர்ப்பில் முறையீடு செய்யும் முறை ஆகிய மூன்று காரணங்களால், ரசிகர்களிடையே இந்த டெஸ்ட் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

* முதல் ஆட்டத்திலேயே, டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் புரிந்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை 147 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11,782 ரன்கள் குவித்த சச்சின், மேற்கிந்திய தீவுகளின் லாராவின் சாதனையை முறியடிப்பதற்கு இன்னும் 172 ரன்களே தேவை. லாரா குவித்த ரன்கள் 11,953.

* ஆசிய கோப்பையில் தனது 'கேரம் பந்து' ரக பந்துவீச்சால் ஜாலம் செய்த மெண்டிஸ் மீது அனைவரின் கவனம் உள்ளது. இவரது முதல் டெஸ்டும் இதுவே. அவரது பந்து வீச்சு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

* முதல் முறையாக நடுவர் தீர்ப்பை எதிர்த்து முறையீடு கோரும் முறை, முதல் டெஸ்டில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன்படி, நடுவர்கள் கொடுக்கும் தீர்ப்பில் பேட்டிங் செய்யும் வீரர் அல்லது ஃபீல்டிங் செய்யும் வீரர்கள் சந்தேகம் கொண்டால், அவரது முடிவை எதிர்த்து 3 -வது நடுவர் தீர்ப்பை கோரலாம்.

அணி விபரம்

இந்திய அணியில் கவுதம் கம்பீர், சேவாக், ‌திராவிட், சச்சின், கங்குலி, ல‌ஷ்மண், தினேஷ் கார்த்திக், ஹர்பஜன், ஜாகீர்கான், கும்ப்ளே (கேப்டன்), முனாப் படேல், இஷாந்த் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை அணியில் மைக்கேல் வன்டர்ட், மலின்டா வர்னபுரா, சங்கக்காரா, ஜெயவர்த்னே (ஜெயவர்த்தனே), சமரவீரா, சமரசில்வா, திலகரத்னே தில்சான், பிரசன்ன ஜெயவர்த்தனே, சமிந்தா வாஸ், முரளிதரன், அஜந்தா மெண்டிஸ், திலன் துஷாரா, நுவான் குலசேகரா, சமர கபுகேந்திரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இலங்கை தொடர்: முதல் டெஸ்டும் மூன்று எதிர்பார்ப்புகளும்!
இந்திய ஜூனியர் ஹாக்கி அணிக்கு மக்களவையில் பாராட்டு
லாஸ் ஏஞ்சல்ஸ் டென்னிஸ் : 2-ம் சுற்றில் சானியா
ஆசிய இளைஞர் செஸ் : இந்தியாவுக்கு 21 பதக்கங்கள்
2-ம் டெஸ்ட்: இங்கிலாந்தை 10 விக்கெட்டுகளில் வென்றது தெ.ஆ.
சர்வதேச டென்னிஸ்சில் ஆசிய ஆதிக்கம் : சானியா மகிழ்ச்சி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...