|
| இலங்கை தொடர்: முதல் டெஸ்டும் மூன்று எதிர்பார்ப்புகளும்! |
| கொழும்பு (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 22 ஜூலை 2008 ( 18:39 IST ) | |
இந்தியா - இலங்கை அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நாளை (புதன்கிழமை) 10.30 மணிக்கு கொழும்பில் தொடங்குகிறது.
சச்சினின் சாதனை, மெண்டிஸின் பந்துவீச்சு மற்றும் நடுவர் தீர்ப்பில் முறையீடு செய்யும் முறை ஆகிய மூன்று காரணங்களால், ரசிகர்களிடையே இந்த டெஸ்ட் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
* முதல் ஆட்டத்திலேயே, டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் புரிந்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை 147 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11,782 ரன்கள் குவித்த சச்சின், மேற்கிந்திய தீவுகளின் லாராவின் சாதனையை முறியடிப்பதற்கு இன்னும் 171 ரன்களே தேவை. லாரா குவித்த ரன்கள் 11,953.
* ஆசிய கோப்பையில் தனது 'கேரம் பந்து' ரக பந்துவீச்சால் ஜாலம் செய்த மெண்டிஸ் மீது அனைவரின் கவனம் உள்ளது. இவரது முதல் டெஸ்டும் இதுவே.
லஷ்மண், சச்சின், திராவிட், கங்குலி உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு பந்துவீசும் நாட்களை ஆர்வத்துடன் எண்ணிக்கொண்டிருப்பதாக கூறியிருந்த மெண்டிஸ், 'கேரம் பந்து' முறையைத் தவிர வேறுபல புதிய உத்திகளையும் கைவசம் வைத்திருப்பதாக கூறியுள்ளார். எனவே, அவரது பந்து வீச்சு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. * முதல் முறையாக நடுவர் தீர்ப்பை எதிர்த்து முறையீடு கோரும் முறை, முதல் டெஸ்டில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
அதன்படி, நடுவர்கள் கொடுக்கும் தீர்ப்பில் பேட்டிங் செய்யும் வீரர் அல்லது ஃபீல்டிங் செய்யும் வீரர்கள் சந்தேகம் கொண்டால், அவரது முடிவை எதிர்த்து 3-வது நடுவர் தீர்ப்பை கோரலாம்.
ஒரு இன்னிங்சில் இரு அணிகளும் இதுபோன்று 3 முறை மறு பரிசீலனை கோரலை முன் வைக்கலாம்.
இந்திய அணியில் கவுதம் கம்பீர், சேவாக், திராவிட், சச்சின், கங்கூலி, லஷ்மண், தினேஷ் கார்த்திக், ஹர்பஜன், ஜாகீர்கான், கும்ப்ளே (கேப்டன்), முனாப் படேல், இஷாந்த் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை அணியில் மைக்கேல் வன்டர்ட், மலின்டா வர்னபுரா, சங்கக்காரா, ஜெயவர்த்னே (ஜெயவர்த்தனே), சமரவீரா, சமரசில்வா, திலகரத்னே தில்சான், பிரசன்ன ஜெயவர்த்தனே, சமிந்தா வாஸ், முரளிதரன், அஜந்தா மெண்டிஸ், திலன் துஷாரா, நுவான் குலசேகரா, சமர கபுகேந்திரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|