|
| இந்திய ஜூனியர் ஹாக்கி அணிக்கு மக்களவையில் பாராட்டு |
| புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 22 ஜூலை 2008 ( 17:29 IST ) | |
ஆசிய ஜூனியர் ஹாக்கி கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, மக்களவையில் இன்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
அதேநேரத்தில், ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற இயலாத இந்திய ஹாக்கி அணிக்கு வருத்தமும் தெரிவிக்கப்பட்டது.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள மக்களவையில் இரண்டாவது நாள் சிறப்புக் கூட்டம் இன்று தொடங்கியவுடன், இந்திய ஜூனியர் ஹாக்கி அணியின் வெற்றியை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி குறிப்பிட்டார்.
இந்திய ஜூனியர் அணிக்கு வாழ்த்து தெரிவித்த அவர், 'இளம் அணி நம்மை பெருமைபட வைத்துவிட்டது' என்றார்.
அப்போது, இந்திய இளம் அணிக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக, மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் மேஜையைத் தட்டினர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|