|
| லாஸ் ஏஞ்சல்ஸ் டென்னிஸ் : 2-ம் சுற்றில் சானியா |
| லாஸ் ஏஞ்சல்ஸ் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 22 ஜூலை 2008 ( 12:04 IST ) | |
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வரும் ஈஸ்ட் வெஸ்ட் பேங்க் கிளாசிக் டென்னிஸ் தொடரின் இரண்டாம் சுற்றுக்கு, இந்தியாவின் சானியா மிர்சா தகுதி பெற்றுள்ளார்.
இப்போட்டிகளின் தரநிலையில் 16-வது இடத்திலுள்ள இவர் தனது முதல் சுற்றில், செக். குடியரசின் ஈவா ஹர்டினோவாவை எதிர்கொண்டார்.
இதில், சானியா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஈவாவை வீழ்த்தி, இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.
உக்ரைனின் காத்தரினா போண்டரென்கோ - சீனாவின் மெங் யுவான் இடையே நடைபெறும் போட்டியில் வெற்றி பெரும் வீராங்கனையுடன், சானியா தனது இரண்டாம் சுற்றில் மோதுவார்.
இதில் சானியா வெற்றி பெற்றால், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்சை எதிர்கொள்ள நேரலாம்.
மகளிர் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் பெத்தானி மெட்டக் உடன் சானியா இணைந்து விளையாடுகிறார்.
இப்போட்டிகளின் தரநிலையில் 2-ம் இடத்திலுள்ள சானியா - பெத்தானி இணை தமது முதல் சுற்றில், அமெரிக்காவின் வானியா கிங் - ரஷ்யாவின் அல்லா குட்ரியாவ்ட்சேவா இணையை எதிர்கொள்கிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|