யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
2-ம் டெஸ்ட்: இங்கிலாந்தை 10 விக்கெட்டுகளில் வென்றது தெ.ஆ.
செவ்வாய்கிழமை, 22 ஜூலை 2008   ( 11:02 IST )
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் 9 ரன்கள் மட்டுமே எடுத்தால் வெற்றி என்ற மிக மிக எளிமையான இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸ்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி, 1.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது. ஸ்மித் 3 ரன்களையும், மெக்கன்சி 6 ரன்களையும் எடுத்தனர்.

முன்னதாக இங்கிலாந்து தமது முதல் இன்னிங்ஸ்சில் 203 ரன்களை மட்டுமே எடுத்தது. அதில், அதிகபட்சமாக பீட்டர்சன் 45 ரன்களை எடுத்திருந்தார்.

அந்த அணி தமது இரண்டாவது இன்னிங்ஸில் 327 ரன்கள் எடுத்தது. பிராட் ஆட்டமிழக்காமல் 67 ரன்களையும், குக் 60 ரன்களையும் எடுத்திருந்தனர். தென் ஆப்பிரிக்க அணியின் ஸ்டெயின் மற்றும் மோர்கலின் பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்தது.

தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸ்சில் 522 ரன்கள் குவித்தது. அந்த அணியின் டி வில்லியர்ஸ் 174 ரன்களையும், பிரின்ஸ் 149 ரன்களையும் குவித்தனர்.

இப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் பிரின்ஸ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மொத்தம் 4 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில், லீட்ஸ் மைதானத்தில் நடந்து முடிந்த இரண்டாம் ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இலங்கை - தென் ஆப்பிரிக்கா இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி வரும் 30-ம் தேதி பிர்மிங்ஹாமில் தொடங்குகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சர்வதேச டென்னிஸ்சில் ஆசிய ஆதிக்கம் : சானியா மகிழ்ச்சி
இலங்கை போர்டு லெவன்-இந்தியா பயிற்சி ஆட்டம் டிரா
ஸ்டான்ஃபோர்ட் டென்னிஸ் : அலெக்சாண்ட்ரா சாம்பியன்
அர்ஜூனா விருது: குழு தலைவரானார் மில்கா சிங்!
பிரின்ஸ் சதம்: வலுவான நிலையில் தென் ஆப்பிரிக்கா!
'சாதனை' சச்சின் விக்கெட்டை வீழ்த்துவதே என் கனவு: மெண்டிஸ்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...