|
| சர்வதேச டென்னிஸ்சில் ஆசிய ஆதிக்கம் : சானியா மகிழ்ச்சி |
| புதுடெல்லி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 21 ஜூலை 2008 ( 14:11 IST ) | |
சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகளில் ஆசிய வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தி வருவது குறித்து இந்தியாவின் சானியா மிர்சா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்த விம்பிள்டன போட்டிகளில் சீனாவின் ஸெங் ஜி மற்றும் தாய்லாந்தின் தமரின் டனசுகர்ன் ஆகிய வீராங்கனைகளிடம் தோல்வியைத் தழுவினாலும், ஆசிய வீராங்கனைகள் தொடர்ந்து முன்னிலை வகிப்பது தன்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதாக, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சானியா கூறியுள்ளார்.
ஸெங் மற்றும் தமரின் ஒருபுறம், மேற்கத்திய நாட்டு வீராங்கனைகளை திணறிடித்தனர். மறுபுறம், சீனாவின் ஸெங் பெங் - டிசுங் ஹுவா இணை ஜூனியர் மகளிர் இரட்டையர் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினர்.
உலகின் நெம்பர் 1 வீராங்கனையான அனா இவானோவிக்கை, சீனாவின் ஸெங்கும், உலக தரவரிசையில் 3-ம் இடத்திலுள்ள ஜெலீனா ஜான்கோவிக்கை, தாய்லாந்தின் தமரினும் வீழ்த்தினர்.
உலகத் தரவரிசையில் முதல் 100 இடங்களில் உள்ள வீராங்கனைகளில், சானியா உள்பட 11 பேர் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
"உலக அளவிலான முன்னணி வீராங்கனைகளுக்கும், ஆசிய வீராங்கனைகளுக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி ஏதுமில்லை. ஏற்றம் பெற்றுவரும் ஆசிய வீராங்கனைகள் பட்டியலில் இடம்பெறுவதில் நான் பெருமை கொள்கிறேன்," என்கிறார் சானியா.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|