யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
ஸ்டான்ஃபோர்ட் டென்னிஸ் : அலெக்சாண்ட்ரா சாம்பியன்
ஸ்டேன்ஃபோர்ட் (ஏஜென்சி), 21 ஜூலை 2008   ( 10:53 IST )
கலிபோர்னியாவின் ஸ்டான்ஃபோர்டில் நடைபெற்ற மகளிர் டென்னிஸ் தொடரில், கனடாவின் அலெக்சாண்ட்ரா வூஸ்னியாக் ஒற்றையர் சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்தத் தொடரின் இறுதிச் சுற்றில் இவர், போட்டித் தரவரிசையில் 6-ம் இடத்திலுள்ள பிரான்ஸ்சின்௦ மரியோன் பர்தோலியை 7- 5, 6- 3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம், 1988-ம் ஆண்டிற்கு பிறகு ஸ்டான்ஃபோர்ட் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வெல்லும் முதல் கனடா நாட்டு வீராங்கனை என்ற பெருமையை அலெக்சாண்ட்ரா பெறுகிறார்.

இறுதிச் சுற்றின் இரண்டாவது செட்டின்போது, பிரான்ஸ் வீராங்கனை பர்தோலி, இடுப்புக் காயத்திற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டார். அதன் பிறகு அவர் சிறப்பாக ‌விளையாட முடியாமல் போனது.

இந்த வெற்றி மூலம் வூஸ்னியாக், உலகத் தரவரிசையில் முதல் 50 இடங்களுக்குள் முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அர்ஜூனா விருது: குழு தலைவரானார் மில்கா சிங்!
பிரின்ஸ் சதம்: வலுவான நிலையில் தென் ஆப்பிரிக்கா!
'சாதனை' சச்சின் விக்கெட்டை வீழ்த்துவதே என் கனவு: மெண்டிஸ்
இந்திய ஜூனியர் ஹாக்கி வீரர்களுக்கு ஜனாதிபதி பாராட்டு
மான்செஸ்டர் டென்னிஸ் : இறுதியில் மங்கத்-அஷுதோஷ் இணை
ஜூனியர் ஹா‌க்‌கி: இந்தியா மீண்டும் சாம்பியன்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...