யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
மான்செஸ்டர் டென்னிஸ் : இறுதியில் மங்கத்-அஷுதோஷ் இணை
புதுடெல்லி (ஏஜென்சி), சனிக்கிழமை, 19 ஜூலை 2008   ( 14:00 IST )
மான்செஸ்டரில் நடைபெறும் ஏடிபி சாலஞ்சர்ஸ் தொடரின் இறுதிச் சுற்றுக்கு, இந்தியாவின் ஹர்ஷ் மங்கத் - அஷுதோஷ் சிங் இணை தகுதி பெற்றுள்ளது.

இப்போட்டிகளின் தரநிலையில் 4-ம் இடத்திலுள்ள இந்த இணை தமது அரையிறுதிச் சுற்றில், பிரிட்டனின் ஜோஷ்வா குட்ஹால் மற்றும் ஸ்வீடனின் மைக்கேல் ரைடர்டஸ்டென்ட் (தரநிலையில் 2-ம் இடம்) இணையுடன் மோதியது.

இதில் இந்திய இணை, 5-7 7-6 (2) 10-4 என்ற செட் கணக்கில், பிரிட்டன் - ஸ்வீடன் இணையை வீழ்த்தியது.

மங்கத் - அஷுதோஷ் இணை தமது இறுதிச் சுற்றில், தரநிலையில் முதலிடத்திலுள்ள ஆஸ்திரேலியாவின் ஆடம் ஃபீனி மற்றும் ராபர்ட் ஸ்மீத் இணையை எதிர்கொள்கிறது.

இதனிடையே, அமெரிக்காவின் அப்டோப்ஸ்சில் நடைபெறும் ஏடிபி சாலஞ்சர் தொடரின் காலிறுதிச் சுற்றில், இந்தியாவின் பிரகாஷ் அமிர்தராஜ் தோல்வியுற்று வெளியேறினார்.

அவர் 6-7 (2) 7-5 6-4 என்ற செட்களில் இத்தாலியின் ஆந்திரே ஸ்டாப்பினியிடம் போராடி வீழ்ந்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜூனியர் ஹா‌க்‌கி: இந்தியா மீண்டும் சாம்பியன்
சார்ல்ஸ்வொர்த் ராஜினாமா ஏற்பு
இந்தியாவில் 2010 உலக கோப்பை ஹாக்கி : எஃப்ஐஹெச் அறிவிப்பு
இண்டியனாபொலிஸ் : காலிறுதியில் போபண்ணா-குரேஷி விலகல்
ஹா‌க்‌கி: இறுதியில் இந்தியா-தென் கொரியா இன்று மோதல்
சர்வதேச கடற்கரை கைப்பந்து : இந்திய இணைகள் அபாரம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
வல்லமை தாராயோ
கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே...
தசாவதாரம்
காத்தவராயன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு...
மேலும் படிக்க|மேலும்...