யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
ஜூனியர் ஹா‌க்‌கி: இந்தியா மீண்டும் சாம்பியன்
ஹைதராபாத் (ஏஜென்சி), 19 ஜூலை 2008   ( 10:38 IST )
ஆசியக் கோப்பை ஜூனியர் ஹாக்கி இறுதிப் போட்டியில், தென்கொரியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை இந்தியா மீண்டும் தக்கவைத்து கொண்டுள்ளது.

6வது ஆசிய ஜூனியர் ஹாக்கிப் போட்டி ஹைதராபாத்தில் நடந்தது. மொத்தம் 8 நாடுகள் பங்கேற்ற இப்போட்டியில், இந்திய அணி விளையாடிய அனைத்து லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது.

தையடுத்து, நேற்று நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென் கொரியா அணிகள் மோதின.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே தென் கொரிய அணி ஆதிக்கம் செலுத்தியது. இதன் உச்சக்கட்டமாக 6வது மற்றும் 52வது நிமிடங்களில் கோல் போட்டு இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால், இந்திய அணி கடும் நெருக்கடிக்குள்ளானது.

எனினும், இந்திய வீரர்கள் சளைக்காமல் போராடியதன் பயனாக, 59வது நிமிடத்தில் ந்திய வீரர் மன்திப் அன்டில் முதல் கோல் போட, 61வது நிமிடத்தில் இந்திய நட்சத்திர வீரர் திவாகர் ராம் 2வது கோல் போட்டார். இதனால் ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமநிலைக்கு வந்தது.

இதன் பின்னர் இந்திய வீரர்கள் புதிய உத்வேகத்துடன் ஆட ஆரம்பித்தனர். என்றாலும், ஆட்ட நேரம் முடியும்வரை எந்த அணியும் கோல் அடிக்காததால், வெற்றி தோல்வியை நிர்ணயிக்க கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி, திவாகர் ராம் 'கோல்டன் கோல்' அடிக்க, 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

இதன் மூலம், தொடர்ந்து 2வது முறையாக இந்திய அணி கோப்பையை கைப்பற்றி, சாம்பியன் பட்டத்தையும் தக்கவைத்து கொண்டது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சார்ல்ஸ்வொர்த் ராஜினாமா ஏற்பு
இந்தியாவில் 2010 உலக கோப்பை ஹாக்கி : எஃப்ஐஹெச் அறிவிப்பு
இண்டியனாபொலிஸ் : காலிறுதியில் போபண்ணா-குரேஷி விலகல்
ஹா‌க்‌கி: இறுதியில் இந்தியா-தென் கொரியா இன்று மோதல்
சர்வதேச கடற்கரை கைப்பந்து : இந்திய இணைகள் அபாரம்
மெண்டிசை விட முரளியே அதிக நெருக்கடி தருவார்: ஹர்பஜன்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
வல்லமை தாராயோ
கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே...
தசாவதாரம்
காத்தவராயன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு...
மேலும் படிக்க|மேலும்...