யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
சார்ல்ஸ்வொர்த் ராஜினாமா ஏற்பு
ஹைதராபாத் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 18 ஜூலை 2008   ( 18:30 IST )
ஹாக்கி அணியின் தொழில்நுட்ப ஆலோசகர் பொறுப்பிலிருந்து விலகிய ஆஸ்திரேலியாவின் ரிக் சார்ல்ஸ்வொர்த் ராஜினாமா, இந்திவிளையாட்டுத்துறை அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு உயர் அதிகாரிகளுடன், இந்திய ஒலிம்பிக் சங்க முக்கிய உறுப்பினர்கள் இன்று நடத்திய ஆலோசனைக்குப் பிறகு, சார்ல்ஸ்வொர்த்தின் ராஜினாமாவை ஏற்க முடிவு செய்யப்பட்டது.

"இந்திய ஹாக்கி அணியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, சார்ல்ஸ்வொர்த் சிறப்பாக பங்காற்றினார். ஆனால், அவரது பணி இப்போது முடிவுக்கு வந்துள்ளது," என்றார், சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தலைவர் எல்ஸ் வான் பிரேடா விரெஸ்மென்.

மேலும், "இந்திய அதிகாரிகள் கேட்டுக் கொண்டால் மட்டுமே, புதிய ஆலோசகரை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்படும்," என்று அவர் ஹைதராபாத்தில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

இந்திய ஹாக்கியில் பணிபுரிவதற்கான நல்ல சூழல் இல்லை (சம்பளத் தொகை சரிவர கொடுக்கப்படாததது உள்ளிட்டவை) என்பதால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக சார்ல்ஸ்வொர்த் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இந்தியாவில் 2010 உலக கோப்பை ஹாக்கி : எஃப்ஐஹெச் அறிவிப்பு
இண்டியனாபொலிஸ் : காலிறுதியில் போபண்ணா-குரேஷி விலகல்
ஹா‌க்‌கி: இறுதியில் இந்தியா-தென் கொரியா இன்று மோதல்
சர்வதேச கடற்கரை கைப்பந்து : இந்திய இணைகள் அபாரம்
மெண்டிசை விட முரளியே அதிக நெருக்கடி தருவார்: ஹர்பஜன்
ஸ்டான்ஃபோர்டு டென்னிஸ்: இரட்டையரிலும் சானியா தோல்வி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
வல்லமை தாராயோ
கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே...
தசாவதாரம்
காத்தவராயன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு...
மேலும் படிக்க|மேலும்...