யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
இந்தியாவில் 2010 உலக கோப்பை ஹாக்கி : எஃப்ஐஹெச் அறிவிப்பு
ஹைதராபாத் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 18 ஜூலை 2008   ( 17:30 IST )
இந்தியாவில் 2010-க்கான ஆடவர் உலக கோப்பை ஹாக்கி போட்டி நடைபெறும் என சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (எஃப்ஐஹெச்) இன்று அறிவித்தது.

உலக கோப்பை ஹாக்கியை நடத்த இந்தியாவுக்கு இன்று முறைப்படி உரிமை வழங்கப்பட்டதாக சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தலைவர் எல்ஸ் வான் பிரேடா விரேஸ்மென் தெரிவித்தார்.

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் சுரேஷ் கல்மாடியை சந்தித்தப் பின் செய்தியாளர்களிடம் வான் பிரேடா கூறுகையில், "சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் 2010-க்கான ஆடவர் உலக கோப்பையை இந்தியாவில் நடத்துவது உறுதியாகிவிட்டது. அதே ஆண்டில் காமன்வெல்த் போட்டிகளும் இந்தியாவிலேயே நடைபெறும்" என்றார்.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பும், இந்திய ஹாக்கி ஒலிம்பிக்கும் இணைந்து நடத்தும் இந்த உலக கோப்பை போட்டிகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்ற அவர், "இதன் மூலம் கிடைக்கும் வருவாய், இந்திய ஹாக்கிக்காகவே செலவழிக்கப்படும்" என்று கூறினார்.

மேலும், "இப்போட்டிகள் டெல்லியில் உள்ள தேசிய ஹாக்கி மைதானத்தில் நடைபெறும். காமன்வெல்த் ஹாக்கி போட்டிகளும் அங்கேதான் நடைபெறும்" என்றார், விரெஸ்மென்.

இந்தியாவில் உலக கோப்பை நடத்துவதற்காக, ஒரு வருடத்துக்கு முன்னரே பரிந்துரைக்கப்பட்ட நிலையில், இப்போட்டிகளை நடத்துவதற்கான கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகள் குறித்து ஆராயப்பட்ட பிறகே தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இண்டியனாபொலிஸ் : காலிறுதியில் போபண்ணா-குரேஷி விலகல்
ஹா‌க்‌கி: இறுதியில் இந்தியா-தென் கொரியா இன்று மோதல்
சர்வதேச கடற்கரை கைப்பந்து : இந்திய இணைகள் அபாரம்
மெண்டிசை விட முரளியே அதிக நெருக்கடி தருவார்: ஹர்பஜன்
ஸ்டான்ஃபோர்டு டென்னிஸ்: இரட்டையரிலும் சானியா தோல்வி
இண்டியானாபோலிஸ் டென்னிஸ்: பயஸ்-பூபதி இணை தோல்வி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
வல்லமை தாராயோ
கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே...
தசாவதாரம்
காத்தவராயன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு...
மேலும் படிக்க|மேலும்...