|
| இண்டியனாபொலிஸ் : காலிறுதியில் போபண்ணா-குரேஷி விலகல் |
| புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 18 ஜூலை 2008 ( 12:11 IST ) | |
அமெரிக்காவில் நடைபெறும் இண்டியனாபொலிஸ் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளின் காலிறுதிச் சுற்றின் இடையிலேயே, இந்தியாவின் ரோஹன் போபண்ணா - பாகிஸ்தானின் அய்சம்-உல்-குரேஷி இணை விலகியது.
இப்போட்டிகளின் தரநிலையில் இடம்பெறாத இந்த இணை, 2-6, 0-1 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே ஃபிஷர் - அமெரிக்காவின் டிரிப் பிலிப்ஸ் இணையிடம் பின்னடைவில் இருந்தது.
அப்போது, போபண்ணாவுக்கு காய௦ம் ஏற்பட்டதால், போட்டியில் இருந்து இந்திய - பாகிஸ்தான் இணை விலகுவதாக அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் இண்டியனாபொலிஸ் டென்னிஸ் தொடரில், இந்திய வீரர்களின் சவால்கள் முழுமையாக முடிவுக்கு வந்துவிட்டது.
முன்னதாக, இப்போட்டிகளின் தரநிலையில் முதலிடத்தில் இருந்த இந்தியாவின் லியாண்டர் பயஸ் - மகேஷ் பூபதி இணை தமது முதல் சுற்றிலேயே தோல்வியுற்று வெளியேறியது.
அண்மையில் நியூபோர்ட்டில் நடந்து முடிந்த ஹால் ஆஃப் ஃபேம் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில், போபண்ணா - குரேஷி இணை இறுதிச் சுற்று வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
இந்திய - பாகிஸ்தான் இணையை வென்ற ஆஷ்லே ஃபிஷர் - டிரிப் பிலிப்ஸ் இணை அரையிறுதியில் அமெரிக்காவின் ராஜீவ் ராம் - பாபி ரெனால்ட்ஸ் இணையை சந்திக்கிறது.
களிமண் தரையில் நடைபெறும் இந்தத் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் இணைக்கு, 525,000 அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | வல்லமை தாராயோ | | கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு... |
| |
|
|
|
|
|
|
|