|
| டென்னிஸ் தரவரிசை : டாப் 20-க்கு பயஸ் முன்னேற்றம்
|
| புதுடெல்லி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 7 ஜூலை 2008 ( 16:02 IST ) | |
விம்பிள்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் அரையிறுதி வரை முன்னேறிய இந்தியாவின் லியாண்டர் பயஸ், தற்போது வெளியிடப்பட்டுள்ள உலக இரட்டையர் பிரிவுக்கான டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் முதல் 20 இடங்களுக்குள் நுழைந்துள்ளார்.
கடந்த வாரம் 23-ம் இடத்திலிருந்த இவர், இம்முறை 8 இடங்கள் முன்னேற்றம் கண்டு 15-ம் இடத்தை அடைந்துள்ளார்.
செக். குடியரசின் லூகாஸ் டிலவுஹியுடன் இணைந்து விம்பிள்டன் அரையிறுதி வரை சென்ற லியாண்டர் பயஸ், 2,250 தரவரிசைப் புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
விம்பிள்டனில் முதல் சுற்றிலேயே வெளியேறியிருந்தாலும், மகேஷ் பூபதி ஓரிடம் ஏற்றம் கண்டு, 2,940 புள்ளிகளுடன் 12-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
உலக மகளிர் டென்னிஸ் தரவரிசைப் பட்டியில், இந்தியாவின் சானியா மிர்சா ஓரிடம் பின்னடைவை சந்தித்து 33-வது தள்ளப்பட்டுள்ளார்.
அதேநேரத்தில், இரட்டையர் பிரிவில் அவர் 1,855 புள்ளிகளுடன் 18-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். விம்பிள்டன் மகளிர் இரட்டையரில் சானியா காலிறுதி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : விலையுயர்ந்த ஆடை,
அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு... |
| |
|
|
|
|
 | | | தசாவதாரம் | | கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக... |
| |
|
|
|
|
|
|
|