யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சச்சின், ஹர்பஜன்
மும்பை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 7 ஜூலை 2008   ( 15:35 IST )
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங் ஆகியோர் இடம்பெறவுள்ளனர்.

இம்மாத இறுதியில் தொடங்கவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடருக்கான, கேப்டன் கும்ப்ளே தலைமையிலான இந்திய அணி நாளை தேர்வு செய்யப்படுகிறது.

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தோனி தலைமையிலான இளைஞர் அணி சோபிக்காத நிலையில், எதிர்வரும் டெஸ்ட் தொடரில் லஷ்மண், கங்குலி, திராவிட் ஆகிய மூத்த வீரர்கள் மீண்டும் களமிறக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

காயம் காரணமாக, வங்கதேச டெஸ்ட் தொடரிலும், ஆசிய கோப்பையிலும் இடம்பெறாத சச்சின் டெண்டுல்கர், தற்போது முழு உடல் தகுதியையும் பெற்றுள்ளார்.

ஹர்பஜன் சிங் மீது 5 ஒருதின போட்டிகள் தடை உள்ள நிலையில், டெஸ்ட் போட்டிகளில் அவர் பங்கேற்க தடையில்லை என்பதால், அணியில் அவர் மீண்டும் இடம்பெறுவார் என்று தெரிகிறது.

மிடில் ஆர்டருக்கென யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பு தரப்படக்கூடும். அண்மைக்காலமாக, சுரேஷ் ராய்னா சிறப்பாக விளையாடி வருவதால், டெஸ்டுக்கும் அவர் சேர்த்துக்கொள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், ஜாஃபருக்கு பதிலாக கம்பீர் சேர்த்துக்கொள்ளப்படவும் வாய்ப்புள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஆசிய கோப்பையை 4-வது முறையாக கைப்பற்றியது இலங்கை
விம்பிள்டன் : ஃபெடரரை வீழ்த்தி நாடல் சாம்பியன்
கிரிக்கெட்: டாஸ் வென்று இந்தியா பந்துவீச்சு!
ஆசிய கோப்பை: இந்தியா- இலங்கை இன்று பலப் பரீட்சை!
விம்பிள்டன்: வீனஸ் சாம்பியன்
விம்பிள்டன் அரையிறுதியில் பயஸ் இணை தோல்வி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌விலையுயர்ந்த ஆடை, அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தசாவதாரம்
கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு...
காத்தவராயன்
பாண்டி
ஆரோக்கியம்
தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக...
மேலும் படிக்க|மேலும்...