|
| ஆசிய கோப்பையை 4-வது முறையாக கைப்பற்றியது இலங்கை |
| கராச்சி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 7 ஜூலை 2008 ( 09:20 IST ) | |
இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி, நான்காவது முறையாக ஆசிய கோப்பை கிரிக்கெட் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
கராச்சியில் நடைபெற்ற இப்போட்டியில், 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 39.3 ஓவர்களில் 173 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
இந்திய அணியில் அதிகபட்சமாக, சேவாக் 60 ரன்களையும், கேப்டன் தோனி 49 ரன்களையும் எடுத்தனர். உத்தப்பா 20 ரன்களையும், ராய்னா 16 ரன்களையும் எடுத்தனர். ஏனையோர் ஒற்றை இலக்க எண்ணிக்கையிலான ரன்களையே எடுத்தனர்.
இலங்கை தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மெண்டிஸ், இந்திய ஆட்டக்காரர்களை வெகுவாக திணறிடித்தார். 8 ஓவர்களை வீசிய அவர், 13 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வாஸ் 2 விக்கெட்டுகளையும், குலசேகரா மற்றும் முரளிதரன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
முன்னதாக, இலங்கை அணி தனது இன்னிங்ஸ்சில், 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்களை எடுத்தது.
அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜெயசூர்யா, பவுண்டரிகளையும் சிக்சர்களையும் விளாசி, ரசிகர்களுக்கு வானவேடிக்கை காட்டினார். தனது மறுமுனையிலுள்ள துவக்க வீரர்கள் 4 பேர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, அவர் மட்டும் நிலைத்து நின்று 125 ரன்களைக் குவித்தார்.
ஜெயசூர்யாவுக்கு நல்ல இணையாக திகழ்ந்த தில்ஷான் 56 ரன்களைச் சேர்த்தார். குலசேகரா 29 ரன்களையும், வாஸ் 19 ரன்களையும் எடுத்தனர்.
இந்திய தரப்பில், ஆர்பி சிங் மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், இர்பான் பதான் 2 விக்கெட்டுகளையும், சேவாக் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இப்போட்டியில் ஆட்டநாயகன் விருது மட்டுமின்றி, தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார், இலங்கையின் மெண்டிஸ்.
கடந்த 1995-க்குப் பிறகு ஆசிய கோப்பையை வெல்லாத இந்திய அணி, இம்முறை கண்டிப்பாக வெல்லும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இம்முறையும் இறுதிப் போட்டியில் இலங்கையிடம் வீழ்ந்தது இந்தியா. கடந்த 1986, 1997, 2004 ஆகிய ஆண்டுகளில் சாம்பியனான இலங்கை, 2008-க்கான கோப்பையையும் தன்வசப்படுத்திக்கொண்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : விலையுயர்ந்த ஆடை,
அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு... |
| |
|
|
|
|
 | | | தசாவதாரம் | | கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக... |
| |
|
|
|
|
|
|
|