யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
விம்பிள்டன் : ஃபெடரரை வீழ்த்தி நாடல் சாம்பியன்
லண்டன் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 7 ஜூலை 2008   ( 08:48 IST )
சுவிட்ஸர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி, விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார், ஸ்பெயினின் ரஃபேல் நாடல்.

உலக தரவரிசையில் இரண்டாம் இடத்திலுள்ள நாடல், மரத்தான் போன்று நீண்ட நேரம் நீடித்த விம்பிள்டன் இறுதிச்சுற்றில், தரவரிசையில் முதலிடத்திலுள்ள ஃபெடரரை 6-4, 6-4, 6-7 (5/7), 6-7 (8/10), 9-7 என்ற செட்கள் கணக்கில் வீழ்த்தினார்.

இதன்மூலம், தொடர்ந்து 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல முனைந்த, ரோஜரின் கனவைக் கலைத்தார், நாடல்.

விம்பிள்டன் வரலாற்றிலேயே நீண்ட நேரம் நடைபெற்ற இறுதிச் சுற்றுப் போட்டி, இதுவேயாகும். இப்போட்டி, 4 மணி 48 நிமிடங்கள் வரை நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கிய இப்போட்டி, மழையின் குறுக்கீடு காரணமாக இரண்டு முறை தடைபட்டது.

இந்த இறுதிச் சுற்றில் வென்று சாம்பியன் பட்டம் வென்றதன் மூலமாக, ஒரே சீசனில் பிரெஞ்ச் ஒபன் பட்டத்தையும், விம்பிள்டன் பட்டத்தையும் வென்ற மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார், ரஃபேல் நாடல்.

இதற்கு முன்பு மனோலா சான்டனா (1966) மற்றும் ஜோன் போர்க் (1980) ஆகியோர் இவ்விரு சாம்பியன் பட்டங்களையும் ஒரே சீசனின் கைப்பற்றியவர்கள்.

கடந்த இரண்டு விம்பிள்டன் இறுதிச் சுற்றுகளில் ரோஜர் ஃபெடரிடம் தோல்வியுற்று, இம்முறை சாம்பியன் பட்டத்தை வென்று மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்ற ரஃபேல் நாடல், "இப்போட்டியில் வெல்வேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. என் மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்றே தெரியவில்லை. என் கனவு நிறைவேறிவிட்டது என்றே சோல்வேன். ஃபெடரரும் சிறப்பாக விளையாடியானார்" என்றார்.

தொடர்ந்து ஆறாவது முறையாக விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்த ஃபெடரரோ, "ரஃபேலின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. இப்பட்டத்தை வெல்லும் முழு தகுதியும் அவரிடம் உண்டு. அடுத்தமுறை நான் மீண்டும் பட்டம் வெல்வேன்" என்று கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கிரிக்கெட்: டாஸ் வென்று இந்தியா பந்துவீச்சு!
ஆசிய கோப்பை: இந்தியா- இலங்கை இன்று பலப் பரீட்சை!
விம்பிள்டன்: வீனஸ் சாம்பியன்
விம்பிள்டன் அரையிறுதியில் பயஸ் இணை தோல்வி
விம்பிள்டன் இறுதிச் சுற்றில் நாடல் - ஃபெடரர் மோதல்
அக்தர் மீதான தடை தற்காலிக நீக்கம் : லாகூர் ஐகோர்ட்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌விலையுயர்ந்த ஆடை, அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தசாவதாரம்
கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு...
காத்தவராயன்
பாண்டி
ஆரோக்கியம்
தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக...
மேலும் படிக்க|மேலும்...