|
| விம்பிள்டன்: வீனஸ் சாம்பியன் |
| லண்டன் (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 6 ஜூலை 2008 ( 12:27 IST ) | |
விம்பிள்டன் மகளிர் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் வீனஸ் வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
விம்பிள்டன் டென்னிசின் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி நேற்று நடந்தது. இதில், அமெரிக்க டென்னிஸ் சகோதரிகளான செரீனா வில்லியம்சும், வீனஸ் வில்லியம்சும் மோதினர்.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முடிவில் 7-5, 6-4 என்ற நேர் செட்களில் வீனஸ் வில்லியம்ஸ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
இவர் முதல் செட்டை 53 நிமிடங்களிலும், 2வது செட்டை 58 நிமிடங்களிலும் கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் வீனஸுக்கு கிடைத்துள்ள 7வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இது.
ஆண்களுக்கான இறுதிப்போட்டி விம்பிள்டனில் இன்று நடைபெறுகிறது. இதில், நடப்பு சாம்பியன் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும், ஸ்பெயினின் ரபேல் நாடலும் மோதுகின்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : விலையுயர்ந்த ஆடை,
அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு... |
| |
|
|
|
|
 | | | தசாவதாரம் | | கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக... |
| |
|
|
|
|
|
|
|