|
| அக்தர் மீதான தடை தற்காலிக நீக்கம் : லாகூர் ஐகோர்ட் |
| லாகூர் (ஏஜென்சி), 5 ஜூலை 2008 ( 11:04 IST ) | |
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர் மீது விதிக்கப்பட்டிருந்த 18 மாத காலத் தடையை தற்காலிகமாக ரத்து செய்து லாகூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அக்தர் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்குக் குழுவால், முதலில் 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட நிலையில், தீர்ப்பாய மேல் முறையீட்டில், அந்தத் தடை 18 மாதங்களாகக் குறைக்கப்பட்டது.
இந்நிலையில், 18 மாத தடை உத்தரவை எதிர்த்து லாகூர் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், அக்தர் மீதான தடையை தற்காலிகமாக நீக்கியது.
அதேநேரத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அக்தருக்கு விதித்த 42 லட்ச ரூபாய் அபராதத் தொகை ரத்து செய்யப்படவில்லை.
இந்த வழக்கு, செப்டம்பர் மாதத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : விலையுயர்ந்த ஆடை,
அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு... |
| |
|
|
|
|
 | | | தசாவதாரம் | | கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக... |
| |
|
|
|
|
|
|
|