|
| கிரிக்கெட்: பாக். அணி வெற்றி இலக்கு 116 ரன்கள்! |
| கராச்சி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 4 ஜூலை 2008 ( 18:55 IST ) | |
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில், வங்கதேசம் அணி, பாகிஸ்தான் அணிக்கு 116 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் கடைசி லீக் ஆட்டம் கராச்சியில் இன்று நடைபெறுகிறது. இதில், பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் களமிறங்கியது. தாமிம் இக்பால் 26, நசிமுதீன் 3, முகமது அஸ்ரபுல் 14, முஸ்பிகிர் ரஹிம் 15, கபாலி 17, முக மதுல்லா 11, அப்துல் ரசாக் 9 ரன்கள் எடுத்தனர்.
38.2 ஓவர்களிலேயே அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பாகிஸ்தான் தரப்பில் அப்துல் ரவுப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்திகார் அன்சும் மற்றும் அஜ்மல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சோஹைல் தன்வீர் மற்றும் சோயிப் மாலிக் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
இதன் மூலம், பாகிஸ்தான் அணிக்கு 116 ரன்களை வங்கதேசம் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : விலையுயர்ந்த ஆடை,
அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு... |
| |
|
|
|
|
 | | | தசாவதாரம் | | கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக... |
| |
|
|
|
|
|
|
|