|
| டி20 உலக கோப்பை: ஜிம்பாப்வே விலகல்; ஐசிசி-யில் நீடிப்பு |
| துபாய் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 4 ஜூலை 2008 ( 16:46 IST ) | |
இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு (2009) நடைபெறும் 2-வது இருபதுக்கு 20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்கவில்லை என அறிவித்த ஜிம்பாப்வே, தொடர்ந்து ஐசிசியின் முழு உறுப்பினராக நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் தொடர்பான சர்ச்சை, துபாயில் நடைபெற்ற மூன்றாம் நாள் ஐ.சி.சி. கூட்டத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்கள் கூட்டத்தில் ஐசிசி தலைவர் டேவிட் மோர்கன் கூறுகையில், "ஐ.சி.சி. உறுப்பினர் தகுதியில் ஜிம்பாப்வே முழுமையாக நீடிக்கும். இதில் சந்தேகமே இல்லை. உறுப்பினர் பதவி விவகாரம் குறித்து விவாதம் கூட நடத்தப்படவில்லை," என்றார்.
அதேநேரத்தில், அடுத்த ஆண்டு நடைபெறும் இருபதுக்கு 20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்கவில்லை என ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஜிம்பாப்வேயில் உள்ள அரசியல் ஒடுக்குமுறைகள், கிரிக்கெட் வளர்ச்சிக்கு ஐசிசி கொடுக்கும் உதவித் தொகைகளை முறைகேடாக பயன்படுத்தியது காரணமாக, அந்த வாரியத்தை ஐ.சி.சி. உறுப்பினர் தகுதியிலிருந்து விலக்கவேண்டும் என்று இங்கிலாந்து உள்ளிட்ட கிரிக்கெட் வாரியங்கள் புகார் கூறிவந்ததையடுத்து, அது தொடர்பாக ஐசிசி ஆலோசித்தது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : விலையுயர்ந்த ஆடை,
அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு... |
| |
|
|
|
|
 | | | தசாவதாரம் | | கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக... |
| |
|
|
|
|
|
|
|