யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
பேட்மின்டன் தரவரிசை : டாப் 20-ல் சாய்னா
புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 4 ஜூலை 2008   ( 15:13 IST )
மகளிர் ஒற்றையருக்கான சர்வதேச பேட்மின்டன் தரவரிசைப் பட்டியலில், இந்தியாவின் சாய்னா நெக்வால் முதல் 20 இடங்களுக்கு முன்னேறியுள்ளார்.

பீஜிங்கில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடவுள்ள அவர், சர்வதேச பேட்மின்டன் கூட்டமைப்பு வெளியிட்ட தரவரிசைப் பட்டியில் 18-ம் இடத்தைக் கைப்பற்றியுள்ளார்.

இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சாய்னா, "என்னுடைய ஆட்டம் மகிழ்ச்சியளிக்கும் விதமாக உள்ளது. இந்த ஆண்டின் துவக்கத்தில் சரியில்லாமல் இருந்தாலும், தற்போது நன்றாக விளையாடி வருகிறேன். என்னுடைய பயிற்சியிலும் திருப்தியாகவுள்ளேன்" என்றார்.

தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற வேண்டும் என்ற இலக்கைக் கொண்டிருப்பதாக கூறிய அவர், "பீஜிங் ஒலிம்பிக்கில் சிறப்பாக விளையாடுவேன். ஆட்டத்தின் தடுப்பு முறைகளில் மேலும் பயிற்சி தேவைப்படுகிறது. அதற்காக, தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறேன்" என்றார்.

பதினெட்டு வயது நிரம்பிய, ஹைதராபாத்தைச் சேர்ந்த சாய்னா, அண்மையில் நடந்த சிங்கப்பூர் ஓபனில் அரையிறுதி வரை முன்னேறி சிறப்புப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
விம்பிள்டன் இறுதிச் சுற்றில் செரீனா-வீனஸ் மோதல்
ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இந்தியா; வீழ்ந்தது இலங்கை
ஒலிம்பிக்௦ : இரட்டையர் டென்னிஸில் சானியா-சுனிதா இணை
பி.எம்.சி. தடகளப் போட்டி : இந்திய வீரர்கள் 3 தங்கம்
ஆசிய கோப்பை : டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்
ஆசிய கோப்பை: இந்தியா- இலங்கை மோதல்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌விலையுயர்ந்த ஆடை, அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தசாவதாரம்
கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு...
காத்தவராயன்
பாண்டி
ஆரோக்கியம்
தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக...
மேலும் படிக்க|மேலும்...