|
| விம்பிள்டன் இறுதிச் சுற்றில் செரீனா-வீனஸ் மோதல் |
| லண்டன் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 4 ஜூலை 2008 ( 12:00 IST ) | |
விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்று போட்டியில், அமெரிக்க சகோதரிகளான வீனஸ் வில்லியம்ஸ், செரீனா வில்லியம்ஸ் மோதவுள்ளனர்.
செரீனா வில்லியம்ஸ் தனது அரையிறுதிச் சுற்றில், விம்பிள்டனில் ரசிகர்களை வியக்கவைத்த சீன வீராங்கனை ஸெங் ஜீ-யுடன் மோதினார்.
இதில், ஸெங் ஜீயை 6-2, 7-6 என்ற நேர் செட்களில் வீழ்த்தி, இறுதிக்கு தகுதி பெற்றார் செரீனா.
உலகத் தரவரிசையில் 133-வது இடத்திலுள்ள ஸெங் ஜீ, தரவரிசையில் முதலிடத்திலுள்ள செர்பியாவின் இவானோவிக் உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகளை வீழ்த்திவிட்டு அரையிறுதி வரை முன்னேறியது குறிப்ப்பிடத்தக்கது.
மற்றொரு அரையிறுதிப் போட்டியில், தரவரிசையில் 5-ம் இடத்திலுள்ள உள்ள ரஷ்ய வீராங்கனை எலினா டீமென்டீவாவை, 6-1, 7-6 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் வீழ்த்தினார்.
கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியில் 3-வது முறையாக மோதவுள்ள வில்லியம்ஸ் சகோதரிகளில், விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார் என்ற ஆவல் டென்னிஸ் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : விலையுயர்ந்த ஆடை,
அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு... |
| |
|
|
|
|
 | | | தசாவதாரம் | | கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக... |
| |
|
|
|
|
|
|
|