|
| ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இந்தியா; வீழ்ந்தது இலங்கை |
| கராச்சி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 4 ஜூலை 2008 ( 09:21 IST ) | |
இலங்கை அணிக்கு எதிரான சூப்பர் ஃபோர் ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா, ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
கராச்சியில் நடைபெற்ற போட்டியில் 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 46.5 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 310 ரன்கள் எடுத்தது.
துவக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் 68 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார்; கேப்டன் தோனி 67 ரன்கள் சேர்த்து வெற்றியை உறுதி செய்தார்; ராய்னாவின் 54 ரன்களும், சேவாக்கின் 42 ரன்களும் அணியின் ரன் எண்ணிக்கையை வெகுவாக உயர்த்தினர்.
யுவராஜ் சிங் ஆட்டமிழக்காமல் 36 ரன்களையும், ரோஹித் ஷர்மா ஆட்டமிழக்காமல் 22 ரன்களையும் எடுத்து, அணியின் வெற்றியை எளிதாக்கினர். இந்த வெற்றிக்கு, இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவருமே சிறப்பாக பங்குவகித்தனர்.
இலங்கை தரப்பில், முரளிதரன் 2 விக்கெட்டுகளையும், குலசேகரா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
முன்னதாக, இலங்கை தனது இன்னிங்ஸ்சில், 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக, கபுகேதரா 75 ரன்களையும், ஜெயவர்த்தனே மற்றும் சில்வா ஆகியோர் தலா 50 ரன்களையும் எடுத்தனர்; துவக்க ஆட்டக்காரர் ஜெயசூர்யா 43 ரன்களை சேர்த்தார். வீரார்த்தனே மற்றும் துஷாரா ஆகியோர் தலா 23 ரன்கள் எடுத்தனர்.
இந்திய தரப்பில் இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டுகளையும், ஆர்பி சிங், இர்பான் பதான், பிரவீண் குமார் மற்றும் ஓஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இப்போட்டியில், இந்திய கேப்டன் தோனி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பெற்று, இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் வரும் 6-ம் தேதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில், இலங்கை அணியை எதிர்கொள்கிறது இந்தியா.
இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான சூப்பர் ஃபோர் சுற்றின் சம்பிரதாய போட்டி இன்று கராச்சியில் நடைபெறுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : விலையுயர்ந்த ஆடை,
அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு... |
| |
|
|
|
|
 | | | தசாவதாரம் | | கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக... |
| |
|
|
|
|
|
|
|