|
| ஆவேசம் வேண்டாம் : ஹர்பஜனுக்கு கங்குலி அறிவுரை |
| புதுடெல்லி (ஏஜென்சி), சனிக்கிழமை, 17 மே 2008 ( 16:37 IST ) | |
ஒரு மூத்த விளையாட்டு வீரரான ஹர்பஜன் சிங் தனது ஆவேசத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கங்குலி அறிவுறுத்தியுள்ளார்.
தொலைக்காட்சி சேனல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கங்குலி, ஸ்ரீசாந்தை ஹர்பஜன் அறைந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அப்போது, மூத்த ஆட்டக்காரரான ஹர்பஜன் சிங்கின் பங்களிப்பு அணிக்கு இன்றையமையாதது என்பதால், அவர் தனது ஆவேசத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஹர்பஜன் ஆவேசம் நிறைந்தவர் என்று குறிப்பிட்ட கங்குலி, ஆனால் அவர் நல்ல உள்ளம் கொண்டவர் என்றும், எந்நேரத்திலும் யாருக்கும் உதவும் குணம் கொண்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீசாந்தை அறைந்த விவகாரத்தில், ஹர்பஜனுக்கு 11 ஐபிஎல் போட்டிகளிலும், 5 சர்வதேச ஒருதினப் போட்டிகளிலும் விளையாட தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்... |
| |
|
|
|
|
|
|
|