|
| ஜெய்ப்பூரில் பாதிக்கப்பட்டோருக்கு ஐபிஎல் ரூ.6 கோடி நிதியுதவி |
| ஜெய்ப்பூர் (ஏஜென்சி), சனிக்கிழமை, 17 மே 2008 ( 12:00 IST ) | |
ஜெய்ப்பூரில் தொடர் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டோருக்கு, இந்தியன் பிரிமீயர் லீக்கின் 8 அணிகளின் உரிமையாளர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் சார்பில் ரூ.6 கோடி நிதியுதவி அளிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக ஐபிஎல் தலைவரும் ஆணையருமான லலித் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், எட்டு அணிகளின் உரிமையாளர்களும், ஏற்பாட்டாளர்களும் வழங்கும் ரூ.6 கோடிக்கான காசோலை, ராஜஸ்தான் முதல்வர் நிவாரண நிதிக்கு அளிக்கப்படுகிறது என்றும், ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பில் பலியானோர் குடும்பங்களுக்கு அந்தத் தொகை போய்ச்சேரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ராஜஸ்தான் - பெங்களூரு அணிகளுக்கு இடையே ஜெய்ப்பூரில் இன்று நடைபெறவுள்ள போட்டியின் முடிவில், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேயிடம் காசோலை வழங்கப்படும்.
ஐபிஎல்-லின் எட்டு உரிமையாளர்கள் தலா 50 லட்ச ரூபாயும், ஐந்து ஏற்பாட்டாளர்களான டிஎல்எஃப், வோடஃபோன், சிட்டி பேங்க், கிங்ஃபிஷர் மற்றும் ஹீரோ ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் தலா ரூ.40 லட்சம் வழங்குவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய போட்டியின்போது, ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக, கறுப்பு நிற பேண்டுகளை கையில் கட்டிக்கொண்டு இரு அணி வீரர்களும் விளையாடுவர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்... |
| |
|
|
|
|
|
|
|