யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
ஐபிஎல் : கோல்கத்தாவை மிக எளிதில் வென்றது மும்பை அணி!
மும்பை (ஏஜென்சி), சனிக்கிழமை, 17 மே 2008   ( 11:36 IST )
இந்தியன் பிரீமியர் லீக்கின் 38-வது இருபதுக்கு 20 போட்டியில், கோல்கத்தா அணியை மிக எளிதாக வீழ்த்தியது மும்பை அணி.

கோல்கத்தா அணியை 67 ரன்களில் சுருட்டி, மும்பை சாதனை செய்தது. இதுவே, ஐபிஎல் போட்டிகளின் குறைந்தபட்ச ரன் எண்ணிக்கையாகும்.

மும்பையில் நடந்த இப்போட்டியில் 68 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிதான இலக்குடன் களமிறங்கிய சச்சின் தலைமையிலான மும்பை அணி, 5.3 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது.

சச்சின் டெண்டுல்கர் ரன் ஏதும் எடுக்காமல், மும்பை ரசிகர்களை ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தார். ஆனால், ஜெயசூர்யா ஆட்டமிழக்காமல் 17 பந்துகளில் 48 ரன்கள் குவித்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்தார்; உத்தப்பா 9 ரன்களையே எடுத்தார்.

முன்னதாக, கோல்கத்தா அணி தனது இன்னிங்ஸ்சில், 15.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 67 ரன்களே எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக, கேப்டன் கங்குலியும் அகார்கரும் தலா 15 ரன்களை எடுத்தனர்; சல்மான் பட் 13 ரன்கள் எடுத்தார்; ஏனையோர் ஓரிலக்க எண்ணிக்கையிலான ரன்களையே எடுத்தனர்.

மும்பை தரப்பில் ஷான் பொலாக் 3 விக்கெட்டுகளையும், பிராவோ, ராஜே மற்றும் தோர்னலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்நால்வரும் தங்களது அபார பந்துவீச்சில், கோல்கத்தா அணி ஆட்டக்காரர்களை மிகவும் திணறிடித்தனர்.

இப்போட்டியில், சிறப்பாக பந்துவீசி மும்பை அணியின் வெற்றிக்கு வித்திட்ட பொலாக்கிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம், புள்ளிப் பட்டியலில் மும்பை அணி 4-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. கோல்கத்தா 6-ம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
என் மீது கல் வீசப்பட்டதை நம்ப முடியவில்லை : சேவாக்
'இருபதுக்கு 20'-ன் வளர்ச்சி 'டெஸ்ட்'-ஐ பாதிக்கும் : ஐசிசி கவலை
ஹம்பர்க் மாஸ்டர்ஸ் : நாடல் போராடி வெற்றி
ஐபிஎல் : மிஷ்ரா அபார பந்துவீச்சு; டெல்லி அணி வெற்றி
ஹாக்கி: பாக்.கை வீழ்த்தியது இந்தியா !
வார்னே, வாட்சன் விலகல் இல்லை : ஐபிஎல் ஆணையர்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்...
மேலும் படிக்க|மேலும்...