|
| 'இருபதுக்கு 20'-ன் வளர்ச்சி 'டெஸ்ட்'-ஐ பாதிக்கும் : ஐசிசி கவலை |
| ஜோகன்னஸ்பெர்க் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 16 மே 2008 ( 14:05 IST ) | |
இருபதுக்கு 20 போட்டிகளுக்கு கிடைத்துவரும் வரவேற்பினால், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐசிசியின் புதிய தலைவ்ர் ஹாரூன் லோர்கட் கவலைத் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் நடந்த ஐசிசி கிரிக்கெட் கமிட்டி கூட்டத்தில், இதுதொடர்பாக பேசப்பட்டது என்ற அவர், டெஸ்ட் கிரிக்கெட்டின் மீதான ஆர்வம் குறையாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டதாக பேட்டி ஒன்றில் கூறினார்.
மேலும், உலக அளவில் கிரிக்கெட் விளையாட்டை வளர்ச்சியடையச் செய்வதற்கு 'இருபதுக்கு 20' வடிவத்தை தகுந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற அவர், அதேநேரத்தில் இந்த வகை கிரிக்கெட்டால் ஒருதின மற்றும் டெஸ்ட் போட்டிக்கு எதிராகிவிடாமல் கவனத்துடன் இருக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருபதுக்கு 20 உலகக் கோப்பையைத் தொடர்ந்து, இந்தப் புதிய வகை கிரிக்கெட் மிகவும் வரவேற்பைப் பெற்றது.
தற்போது, இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதைத் தொடர்ந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய கிரிக்கெட் வாரியங்களும் இந்திய வாரியத்தின் வழியைப் பின்பற்ற திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|