|
| ஐபிஎல் : மிஷ்ரா அபார பந்துவீச்சு; டெல்லி அணி வெற்றி |
| டெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 16 மே 2008 ( 09:40 IST ) | |
இந்தியன் பிரீமியர் லீக்கின் 37-வது இருபதுக்கு 20 போட்டியில், மிஷ்ராவின் அபார பந்துவீச்சால், ஐதராபாத் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வீழ்த்தியது.
இப்போட்டியில் 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்துத் தோல்வியைத் தழுவியது.
ஆட்டத்தின் கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், ஐதராபாத் அணி மூன்று ஆட்டக்காரர்களை, டெல்லியின் மிஷ்ரா ஆட்டமிழக்கச் செய்து வெற்றிக்கு வித்திட்டார்.
ஐதராபாத் அணியில் ரோஹித் ஷர்மா 35 ரன்களையும், வேணுகோபால் ராவ் 34 ரன்களையும் எடுத்தனர். அஃபிரிதி 33 ரன்களையும், ஸ்டைரிஸ் 29 ரன்களையும் சேர்த்தனர்; ஏனையோர் சொற்ப ரன்களே எடுத்தனர்.
டெல்லி அணி தரப்பில், மிஷ்ரா 5 விக்கெட்டுகளையும், மெக்ராத் மற்றும் ஆசிஃப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
முன்னதாக டெல்லி அணி தனது இன்னிங்ஸ்சில், கம்பீர் 79 ரன்களையும், தவான் ஆட்டமிழக்காமல் 68 ரன்களையும் குவித்தனர். மகரூப் 19 ரன்களையும், தில்ஷன் 16 ரன்களையும் எடுத்தனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|