|
| ஹாக்கி: பாக்.கை வீழ்த்தியது இந்தியா ! |
| இபோ (ஏஜென்சி), வியாழக்கிழமை, 15 மே 2008 ( 18:50 IST ) | |
மலேசியாவில் நடைபெறும் சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி தொடரில் பாகிஸ்தானை 2- 1 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியது.
7 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த பாரம்பரியமிக்க ஹாக்கி தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் தோலியடைந்த இந்தியா,தற்போது பாகிஸ்தானை வீழ்த்தியதன் மூலம் 3 வது வெற்றியை ஈட்டியுள்ளது.
இடைவேளைக்கு முன் 6ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் சந்தீப் சிங், பிறகு 20 வது நிமிடத்தில் திவாகர் ராம் ஆகியோர் 2 கோல்களை அடித்து முன்னிலை கொடுத்தனர்.
ஆட்டத்தின் துவக்கத்திலிருந்தே இந்திய வீரர்கள் தாக்குதல் ஆட்டம் விளையாடினர்.குறிப்பாக முன் கள வீரர் ஷிவேந்திர சிங் அபாரமாக விளையாடி இரண்டு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார்.
6ஆவது நிமிடத்தில் சந்தீப் சிங் பெனால்டி கார்னர் வாய்ப்பை தன் சக்தி வாய்ந்த ஷாட் ஒன்றால் கோலாக மாற்றினார்.
பாகிஸ்தான் இடைவேளைக்கு முன்பே 4 பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோலாக மாற்றாமல் கோட்டை விட்டனர்.
இந்த வெற்றி மூலம் 5 போட்டிகளில் இந்திய அணி 9 புள்ளிகளை பெற்றுள்ளது. நாளை மலேசியாவுடன் மோதுகிறது இந்திய அணி.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|