யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
வார்னே, வாட்சன் விலகல் இல்லை : ஐபிஎல் ஆணையர்
புதுடெல்லி (ஏஜென்சி), 15 மே 2008   ( 16:45 IST )
ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலியாக, ராஜஸ்தான் அணியின் ஷேன் வார்னே, ஷேன் வாட்சன் உள்ளிட்ட வீரர்கள், இந்தியன் பிரீமியர் லீக்கில் இருந்து விலகவுள்ளதாக வந்திருக்கும் செய்தி, வெறும் வதத்தியே என்று ஐபிஎல் ஆணையர் லலித் மோடி கூறினார்.

இதுதொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவாவில் இருந்து வார்னே, வாட்சன் மற்றும் கிராம் ஸ்மிதி ஆகியோர் ஜெய்ப்பூருக்கு ஏற்கெனவே கிளம்பிவிட்டனர் என்று தெரிவித்தார்.

ராஜஸ்தான் அணி வீரர்கள் சனிக்கிழமை ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ள விளையாடுவார்கள் என்ற அவர், ஆஸ்திரேலிய வீரர்களிடம் தொடக்கத்தில் சிறிது அச்சம் இருந்தது, ஆனால் இப்போது முழுவதுமாக உறுதியளித்துள்ளனர் என்று கூறினார்.

இப்போட்டியையொட்டி மேற்கொள்ளவுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் கூறுகையில், ஜெய்ப்பூர் மைதானத்தில் பார்வையாளர்கள் நுழையும்போதும், வெளியேறும்போது முழு அளவில் சோதனை செய்யப்படுவர் என்றும், தீவிர போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, குண்டுவெடிப்பு சம்பவத்தினால் அச்சமுற்ற ராஜஸ்தான் அணியின் வீரர்களான ஷேன் வார்னே, ஷேன் வாட்சன் மற்றும் கிராம் ஸ்மித் ஆகியோர் விலக பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாயின.

இந்தத் தகவல், ராஜஸ்தான் அணியின் மேலாளர் டேரன் பெர்ரி அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தாகவும் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஹாக்கி: பாக்.கை வீழ்த்தியது இந்தியா !
'ஜெய்ப்பூர்': ஐபிஎல்-லில் இருந்து வார்னே, வாட்சன் விலக வாய்ப்பு
ஐபிஎல் : ஜெயசூர்யா அதிரடிக்கு பணிந்தது சென்னை அணி
ஹர்பஜனுக்கு 5 ஒருதின போட்டிகளில் விளையாட தடை
'டென்னிஸ் : ஓய்வு பெறுகிறார் ஹெனின்'
ஹம்பர்க் மாஸ்டர்ஸ் : பூபதி - நோல்ஸ் இணை தோல்வி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...