|
| 'ஜெய்ப்பூர்': ஐபிஎல்-லில் இருந்து வார்னே, வாட்சன் விலக வாய்ப்பு |
| மெல்போர்ன் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 15 மே 2008 ( 13:34 IST ) | |
ஜெய்ப்பூரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இருந்து ராஜஸ்தான் அணியின் வீரர்களான ஷேன் வார்னே, ஷேன் வாட்சன் மற்றும் கிராம் ஸ்மித் ஆகியோர் விலக பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது கோவாவில் ஓய்வெடுத்து வரும் ராஜஸ்தான் அணியின் கேப்டன் வார்னே, வாட்சன், ஸ்மித் மற்றும் அணி மேலாளர் டேரன் பெர்ரி ஆகியோர், குண்டுவெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு ஜெய்ப்பூர் திரும்ப மறுத்துள்ளனர்.
இதுதொடர்பாக பேட்டி ஒன்றில் பெர்ரி கூறுகையில், தாங்கள் மிகவும் திருப்தியற்ற நிலையில் உள்ளதாகவும், நாடு திரும்புவதற்குக் கூட சாத்தியம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தாம் இருப்பதை தன்னுடைய குடும்பத்தினர் பாதுகாப்பாக கருதவில்லை என்று குறிப்பிட்ட அவர், ஜெய்ப்பூர் சம்பவம் தொடர்பாக வார்னேவிடம் பேசியபோது, அவரும் தனது அச்சத்தை வெளிப்படுத்தியதாக பெர்ரி கூறியுள்ளார்.
ஜெய்ப்பூரில் அடுத்த போட்டி, வரும் 17-ம் தேதியன்று பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெறவுள்ளது. இதற்காக, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும் என ஐபிஎல் ஆணையர் லலித் மோடி உறுதியளித்துள்ளார்.
ஆயினும், அப்போட்டி தங்களுக்கு அச்சத்தை மேலும் அதிகமாக்குவதாகவே பெர்ரி கூறியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|