|
| ஐபிஎல் : ஜெயசூர்யா அதிரடிக்கு பணிந்தது சென்னை அணி |
| மும்பை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 15 மே 2008 ( 10:25 IST ) | |
இந்தியன் பிரீமியர் லீக்கின் 36-வது இருபதுக்கு 20 போட்டியில், ஜெயசூர்யாவின் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி எளிதில் வென்றது.
இப்போட்டியில் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சச்சின் தலைமையிலான மும்பை அணி, 13.5 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 158 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜெயசூர்யா 48 பந்துகளை மட்டுமே சந்தித்து, ஆட்டமிழக்காமல் 114 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். ஆனால், சச்சின் தனது முதல் ஐபிஎல் போட்டியில் 12 ரன்களை மட்டுமே எடுத்து ரசிகர்களை ஏமாற்றத்துக்கு ஆளாக்கினார். உத்தப்பா ஆட்டமிழக்காமல் 16 ரன்கள் எடுத்தார்.
முன்னதாக, தோனி தலைமையிலான சென்னை அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்களை எடுத்தது.
பத்ரிநாத் 53 ரன்களையும், தோனி ஆட்டமிழக்காமல் 43 ரன்களையும் எடுத்து, அணியின் ரன் எண்ணிக்கையை ஓரளவு உயர்த்தினர். பிளெமிங் 26 ரன்களையும், வித்யுத் 16 ரன்களையும் எடுத்தனர்.
மும்பை தரப்பில், குல்கர்னி 3 விக்கெட்டுகளையும், பிராவோ 2 விக்கெட்டுகளையும், பொலாக் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இப்போட்டியில் மும்பை அணியின் ஜெயசூர்யாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்தத் தொடரில் இதுவரை, 10 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி, 6-ல் வெற்றி பெற்றுள்ளது; 8 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி, 4-ல் வெற்றி பெற்றுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|